அழகான என் ஊர்  



















வீடு அருகே கோயில் ,சற்று தூரத்தில் சொர்க்கம் ஆம்!
 நந்தவனமாய் என் வயல் 
அருகம்புல்லின் அன்பு வருடல் 
என் நினைவில் அன்னையின் ஆசை தழுவல் 
தென்னங்கீற்றின் கீதம்
என்னையே மறக்க வைக்கும் நாதம் 
வாழை மரத்தின் வரவேற்ப்பு 
என் உடம்பில் ஏற்படும் சிலுசிலுப்பு

சிட்டுக்குருவியின் சினுங்கள் சத்தம் 
என் காதில் கேட்கும் நித்தம் 
கருங்குயிலின் கானாப்பாட்டு  
என் இதயத்தில் தாலாட்டு 
குதூகலமாய் கொஞ்சி திரியும் மயில்கள் 
என்னை குதூகலப்படுத்தும் என் வயலின் குயின்கள் 
கலர்கலராய்  கண்ணுக்கழகாய் பறந்து செல்லும் பட்டாம்பூச்சி 
என் மனதில் ஏற்ப்படுத்தும் பெரும் மகிழ்ச்சி
அங்கும் இங்கும் ஆட்டம் போடும் அணில் 
அவை அனைத்தும் என் நெஞ்சில் நீங்கா இளவேனில்
மழலையின் பேச்சு ஆம் ! 
என் தோட்டத்தின் பச்சைகிளிகளின் பேச்சு 
இனி நின்றாலும் பரவாயில்லை என் மூச்சு!

இன்னும் சொல்லிகொண்டே போகலாம் என் ஊரின் அழகை!




 

 




No comments:

Post a Comment