கொஞ்சம் பிலோஸோபி பாஸ் 

உற்று நோக்க நேரமில்லை
நீ உற்று நோக்கினால் வானமே எல்லை

செவி மடுக்க பொறுமையில்லை
நீ செவி மடுத்தால்  தீரும் பல தொல்லை

பேசி முடிக்க வார்த்தையில்லை
நீ பேசினால் முடியாத பிரச்சனை இங்கில்லை

தோல்வி ஒன்றும் நிரந்திரம் இல்லை
நீ உணர்ந்தால் தோல்விக்கு இனி வெற்றியில்லை

நோய் தீர்க்க மருந்தில்லை
நீ உன்னை நம்பினால் தீராத நோயில்லை

பழி தீர்ப்பதில் பயனில்லை
நீ மன்னித்து வாழ்வதினால் பழியொன்றுமில்லை

தேடலில் கிடைப்பது பொருளில்லை
நீ தேடாமல் வாழ்வதில் பொருள் இல்லை

கூடி வாழ்வதில் குறையில்லை
நீ கூடாமல் வாழ்வதில் நிறைவில்லை

தர்மம் செய்ய பணமில்லை
நீ நினைத்தால் பணம் ஒரு தடையில்லை

சிரித்து பழக சிந்திக்க தேவையில்லை
நீ சிரிக்க மறந்தால் உனக்கு சிந்தனையே இல்லை

உண்மைக்கும் பொய்க்கும் நிறமில்லை
நீ நிறம் பூசினால் அது உண்மையில்லை

காதல் செய்ய கண்ணியம் இல்லை
நீ கண்ணியமாய் இருந்தால் உனக்கு மயங்காத கண்ணியும் இங்கில்லை .

கவிஞனுக்கும் கவிதைக்கும் சம்மந்தமில்லை
நீ புரிந்துகொண்டால் கவிஞனும் ஒரு கற்பனையே .




No comments:

Post a Comment