கொஞ்சம் பிலோஸோபி பாஸ் 

உற்று நோக்க நேரமில்லை
நீ உற்று நோக்கினால் வானமே எல்லை

செவி மடுக்க பொறுமையில்லை
நீ செவி மடுத்தால்  தீரும் பல தொல்லை

பேசி முடிக்க வார்த்தையில்லை
நீ பேசினால் முடியாத பிரச்சனை இங்கில்லை

தோல்வி ஒன்றும் நிரந்திரம் இல்லை
நீ உணர்ந்தால் தோல்விக்கு இனி வெற்றியில்லை

நோய் தீர்க்க மருந்தில்லை
நீ உன்னை நம்பினால் தீராத நோயில்லை

பழி தீர்ப்பதில் பயனில்லை
நீ மன்னித்து வாழ்வதினால் பழியொன்றுமில்லை

தேடலில் கிடைப்பது பொருளில்லை
நீ தேடாமல் வாழ்வதில் பொருள் இல்லை

கூடி வாழ்வதில் குறையில்லை
நீ கூடாமல் வாழ்வதில் நிறைவில்லை

தர்மம் செய்ய பணமில்லை
நீ நினைத்தால் பணம் ஒரு தடையில்லை

சிரித்து பழக சிந்திக்க தேவையில்லை
நீ சிரிக்க மறந்தால் உனக்கு சிந்தனையே இல்லை

உண்மைக்கும் பொய்க்கும் நிறமில்லை
நீ நிறம் பூசினால் அது உண்மையில்லை

காதல் செய்ய கண்ணியம் இல்லை
நீ கண்ணியமாய் இருந்தால் உனக்கு மயங்காத கண்ணியும் இங்கில்லை .

கவிஞனுக்கும் கவிதைக்கும் சம்மந்தமில்லை
நீ புரிந்துகொண்டால் கவிஞனும் ஒரு கற்பனையே .




ஓசை ஓர் ஆனந்தம்

              
ஓசை ஓர் ஆனந்தம் 














மழையின் ஓசை  
          மண்ணுக்கு ஆனந்தம் 
மழைலையின் ஓசை
         அன்னைக்கு ஆனந்தம் 
மணியின் ஓசை 
          மாணவர்களுக்கு ஆனந்தம் 
பசுவின் ஓசை 
         கன்றுக்கு ஆனந்தம் 
பட்டாசின் ஓசை 
          தீபாவளிக்கு ஆனந்தம் 
சேவலின் ஓசை 
         விடியலுக்கு ஆனந்தம்
முத்தத்தின் ஓசை 
         முதலிரவுக்கு ஆனந்தம் 
ரயிலின் ஓசை 
          பயணத்திற்கு ஆனந்தம் 
குயிலின் ஓசை 
          இசைக்கு ஆனந்தம் 
கொசுவின் ஓசை 
           கைகளுக்கு ஆனந்தம் 
கொலுசின் ஓசை 
           தலைவனுக்கு ஆனந்தம் 
வளையலின்  ஓசை 
          கர்ப்பிணிக்கு ஆனந்தம்
சலங்கையின் ஓசை 
          காளைக்கு ஆனந்தம் 
தமிழின் ஓசை 
          உணர்வுக்கு  ஆனந்தம் 
தமிழர்களின் ஓசை 
           உரிமைக்கு ஆனந்தம் 


ஓசைக்குள் இத்தனை ஆனந்தம் 

          ரசிக்க மறந்தோர் இருந்தும் பயனிலை 
                        இறந்தும் துயரில்லை.
  
        

செவிட்டு சமுதாயம்






நீ கடன் வாங்கினாய் 
அவர்கள் கடன் அடைக்க ...

நீ உழுதாய் 
அவர்கள் உண்டார்கள் .

நீ நடவு நட்டாய் 
அவர்கள் அறுவடை செய்தார்கள்... .. 

நீ உறங்காமல் உழைத்தாய் 
அவர்கள் உண்டுவிட்டு உறங்குகிறார்கள் ...

நீ நீர் கேட்டாய் 
அவர்கள் அணை காட்டுகிறார்கள் ..

நீ மின்சாரம் கேட்டாய் 
அவர்கள் உன் நிலம் கேட்டார்கள் ...

நீ லோன் கேட்டாய் 
அவர்கள் லஞ்சம் கேட்டார்கள்... 

நீ நகையை அடகு வைத்தாய் 
அவர்கள் நாட்டை அடகு வைத்தார்கள்... 

நீ விளைவித்ததற்கு நல்ல விலை கேட்டாய் 
அவர்கள் விலையாய்  உன் உயிரை கேட்டார்கள் ...

நீ பட்டிணி கிடந்தாய் 
அவர்கள் பாட்டலில் கிடந்தார்கள் ...

நீ நிவாரணம் கேட்டாய் 
அவர்கள் நிர்வாணம் கொடுத்தார்கள்...

நீ போராடினாய் 
அவர்கள் வியாபாரம் செய்தார்கள் ...

நீ நடுரோட்டில் உருண்டாய் 
அவர்கள் கோடியில் புரண்டார்கள் ...

நீ குளிரில் நடுங்கினாய் 
அவர்கள் கூவத்தூரில் கும்மாளம் போட்டார்கள் ...

நீ மண்சோறு தின்கிறாய் 
அவர்கள் நம் மண்ணை விற்று தின்றார்கள் ....

நீ செத்தாய் 
அவர்கள் செய்தி போட்டார்கள்...

நீ நெல்மணிகளை எலிகளிடம் காத்து கொடுத்தாய் 
அவர்கள் எலியை தின்ன சொன்னார்கள் ...

நீ மானியம் கேட்டாய் 
அவர்கள் உன் மானத்தை கேட்டார்கள் ...

நீ கடன் தள்ளுபடி கேட்டாய் 
அவர்கள் உஉன்னை தள்ளுபடி செய்தார்கள் ...

நீ சந்திக்க அனுமதி கேட்டாய் 
அவர்கள் நடிகைக்கு அனுமதி கொடுத்தார்கள் ..

நீ நீதி கேட்டாய் 
அவர்கள் தேச துரோகி என்றார்கள் ..

நீ தரணியில் பசி போக்கினாய் 
அவர்கள் பிச்சை எடுக்க விட்டார்கள் ...

நீ அழுதாய் 
அவர்கள்  சிரித்தார்கள் ...

ஏய் உழவா நீ கேட்டது போதும் ...
இந்த செவிட்டு சமுதாயத்திடம் ...

நீ கொடுப்பதை நிறுத்து...

பிறகு இந்த எச்சை சமுதாயம் கேட்கும்,,,,, 
பிச்சையாய் ஒரு வேலை சோறு போடு  என்று ...

ஏ விவசாயியே ...நினைவில்கொள்..
உன் கோமணத்தை உருவியகயவர்கள் உன் காலடியில் விழும் நாள் இன்னும் வெகுதூரம் இல்லை ...

அவர்கள் நாடகம் ஆடுவார்கள் ....
உன் ஈர இதயத்தை கழற்றி காயபோடு...
அவர்களை மறந்தும் மன்னித்து விடாதே ...

காலம் வரும் காத்திரு...
நம்பிக்கை கொள் உழவா ...

அரசன் நம்மை ஆண்டு கொன்றான் ...
ஊருக்கு உணவு அளிக்கும் தெய்வம் நீ..
நின்றுதான்  கொல்லுவாய் நீ ...


                                                   - இப்படிக்கு 
செவிட்டு சமுதாயத்தின்  செவிடனாய் ஒரு விவசாயி மகன்.