நிலவா ? அவளா ?








மாலை தென்றல் வீச தென்னங்கீற்று விலகத் தெரியும் 
வெண்மதி தான் அழகு என்று இருந்தேன் 
ஆனால் மல்லிகை பூ மணம் வீச கார்கூந்தல் விலகத் தெரியும் 
உன் முகமதி தான் அழகு என்று உணர்ந்தேன் 
அன்பே உன் அழகில் தோற்த்தது அந்த நிலவா? 
இல்லை நானா ? 
தன் மாமனை எண்ணி ஒரு கிராமத்து பெண்ணின்  பாட்டு.. 


படிச்ச பொண்ணு வேனாம்   மாமா 
பாதியில விட்டுடுவா
டவுன்னு பொண்ணு வேனாம்   மாமா 
டவுசர் கிழிய அடிப்பா
புடிச்ச  பொண்ணு  வேனாம்   மாமா   
புடிக்கலைனா ஓடிடுவா
பணக்கார பொண்ணு வேனாம்   மாமா 
பாடாய்  படுத்திடிவா
அழகான பொண்ணு வேனாம்   மாமா 
ஆளையே மாத்திடுவா 

கருப்பா இருந்தாலும் கலையாய் நானுரிக்கேன்
கருத்தாய் பாத்துக்குவேன்
சிவப்பா இல்லநாலூம் சிலையாய் நானுரிக்கேன்
செல்லமாய் பாத்துக்குவேன்
பணம் காசு இல்லநாலூம் பாசம் காட்ட நானுரிக்கேன்
பத்திரமா பாத்துக்குவேன்
நாலழுத்து படிகாட்டாலும் உன்ன நானும் படிச்சிருக்கேன் 
நல்லா பாத்துக்குவேன்
டவுனு நாகரீகம் தெரியாட்டாலும் குடும்ப நாகரீகம் தெரிஞ்சிருக்கேன்
டக்கரா பாத்துக்குவேன்  


சமஞ்ச நாள் முதலா 
சம்மந்தி பூ காத்திருக்கு 
உன்ன எண்ணி ஒரு கிளி 
உறங்காம காத்திருக்கு 
மாலையிட வா மாமா 
மல்லிகை பூ காத்திருக்கு 
பரிசம் போட வா மாமா
பாதி வழி காத்திருக்கேன்




பட்டம் கட்ட வந்திடாத
பாடையில போயிடுவேன்.
உன் நினைப்பு மட்டும் இங்கிருக்கு
மொத்த உசிரு அங்க இருக்கு


காதலோடு காத்திருக்கேன் 
கார் ஏறி வா மாமா.....













அன்பின் ஆழம் ...

அன்னையின் அன்பை கணக்கிட முடிந்தால் 
அன்பின் ஆழத்தை கணக்கிட முடியும்..
கண்ணாடி.. 

தொடாமல் நான் தினமும் பார்த்து பார்த்து ரசிக்கும் என் ஆசைக்காதலி -கண்ணாடி 
என் முதல் கிறுக்கல்,

ரோஜா மலரை பார்த்து ரசிக்க மட்டும் தெரிந்த எனக்கு
அதன் மணம் நுகர வைத்துவிட்டாய் 
நான் ரசிகனா ? 
இல்லை உன் மனம் 
நுகரவிருக்கும் மனவாளனா?