நீ கடன் வாங்கினாய்
அவர்கள் கடன் அடைக்க ...
நீ உழுதாய்
அவர்கள் உண்டார்கள் .
நீ நடவு நட்டாய்
நீ உறங்காமல் உழைத்தாய்
நீ நீர் கேட்டாய்
நீ மின்சாரம் கேட்டாய்
நீ லோன் கேட்டாய்
நீ நகையை அடகு வைத்தாய்
நீ விளைவித்ததற்கு நல்ல விலை கேட்டாய்
நீ பட்டிணி கிடந்தாய்
அவர்கள் பாட்டலில் கிடந்தார்கள் ...
நீ நிவாரணம் கேட்டாய்
நீ போராடினாய்
நீ நடுரோட்டில் உருண்டாய்
நீ குளிரில் நடுங்கினாய்
நீ மண்சோறு தின்கிறாய்
நீ செத்தாய்
நீ நெல்மணிகளை எலிகளிடம் காத்து கொடுத்தாய்
அவர்கள் உன் மானத்தை கேட்டார்கள் ...
நீ கடன் தள்ளுபடி கேட்டாய்
நீ சந்திக்க அனுமதி கேட்டாய்
நீ நீதி கேட்டாய்
நீ தரணியில் பசி போக்கினாய்
நீ அழுதாய்
ஏய் உழவா நீ கேட்டது போதும் ...
நீ கொடுப்பதை நிறுத்து...
பிறகு இந்த எச்சை சமுதாயம் கேட்கும்,,,,,
பிச்சையாய் ஒரு வேலை சோறு போடு என்று ...
ஏ விவசாயியே ...நினைவில்கொள்..
உன் கோமணத்தை உருவியகயவர்கள் உன் காலடியில் விழும் நாள் இன்னும் வெகுதூரம் இல்லை ...
அவர்கள் நாடகம் ஆடுவார்கள் ....
உன் ஈர இதயத்தை கழற்றி காயபோடு...
அவர்களை மறந்தும் மன்னித்து விடாதே ...
காலம் வரும் காத்திரு...
நம்பிக்கை கொள் உழவா ...
அரசன் நம்மை ஆண்டு கொன்றான் ...
ஊருக்கு உணவு அளிக்கும் தெய்வம் நீ..
நின்றுதான் கொல்லுவாய் நீ ...
- இப்படிக்கு
செவிட்டு சமுதாயத்தின் செவிடனாய் ஒரு விவசாயி மகன்.