புடிச்சா லைக் பண்ணுங்க , புரிஞ்சா ஷேர் பண்ணுங்க ...



முகநூல் மற்றும் எனது ப்ளாகு வாசகர்களுக்கு என் வணக்கம். முதலில் இந்த பதிவை படிக்க முற்பட்டதுக்கு நன்றிகள் கோடி. உதவும் உள்ளங்கள்  இன்னும் இந்த மண்ணில் இருக்கு என்பதற்கு சான்று சில உதவும்  மக்கள் இருப்பதினால் தான் .அவ்வாறு நான் சந்தித்த உதவும் உள்ளம் கொண்ட தம்பதியினர் பற்றி தான் இந்த பதிப்பு .என் வாழ்வில் நடந்த ஒரு மறக்கமுடியாத அனுபவம் .

ஒரு நாள் நான் என் வேலை முடித்துவிட்டு பெங்களூர் forum மாலுக்கு நண்பர் ஒருவரை சந்திக்க சென்றேன். அவர் வரும் வரை நான் காத்திருந்தாலும் என் முக்கால் ஜான் வயறு காத்திருக்கவில்லை .எதாவது தின்ன தேடுதே என்று சுற்றும் முற்றும் பார்த்தேன் . வேர்கடலை காரர் கருக்கு முறுக்குன்னு வருத்த சத்தம் வயிறுக்கு இதமாக இருந்தது . 

கிட்ட போய் bhayaaa எனக்கு ஹிந்தி தெரியும்நுட்டு யிக் தேதோ ...............
அவரு மேலும் கிழும் பார்த்துட்டு ஒன்னுதான னுட்டு .....................

ஒரு சுருட்டிய பபேர்ல நல்லா திணிச்சி கடலைய கொடுத்தார் .எனது வறண்ட வயிரின் வானிலை என் முகத்தில் தெரிய சரிபாவம் பய்யன் பரிதாம மூஞ்சிய வசிருக்கானுட்டு கொஞ்சம் கடலையை கையில் போட்டார் ...
.
எனக்கு ரொம்பவும் சந்தோசம் .அந்த சந்தோசத்தோடு எனது வால்லெட் எடுத்து பைசா கொடுத்துவிட்டு தேங்க்ஸ் னா என்று சொன்னவுடன் ச இந்த மாதிரி நம்ம ஆபீஸ்ல எக்ஸ்ட்ரா சம்பளம் கொடுத்தா எவ்ளோ நல்லா இருக்குனு நெனைச்சன் ...............

கொய்யால நெனைச்ச உடனே வழிந்து  இருந்த கடலை தவறுதலா கிழே விழுந்தது. அதை பார்த்த அந்த மாமனிதன் இழந்த கடலைக்கு ஈடாக கொஞ்சம் கடலை கொடுத்தார் .அங்க தான் நான் மனித நேயத்தை கண்டேன் .எனது மனசும் வயுரும் நெரஞ்சிது. ச்ச இவங்களோட ஒரு நாள் வருமானம் எவ்வளவு இருக்கும் ..நல்ல மனுஷங்க இருக்காங்க பா ,,,

அப்பிடியே என்னோட அக்குள்ள எனது வால்லட்ட  (Purse )  வைத்துகொண்டு சுட சுட இருந்த வருத்த வேர்கடலையை ரொம்ப ரசித்து கொண்டே சாப்பிட்டு கொண்டே நடந்தேன் ... கொஞ்சம் உப்பு அதிகம் தான் இருந்தாலும் பரவாஇல்லை ....அண்ணார்ந்து பார்த்துகொண்டு ச்ச நம்ம அம்மா கடலைய எண்ணை, மிளகா பொடி போட்டு மிக்ஸ் பண்ணி ஸ்கூல் விட்டு வந்ததும் snacks தருவாங்களே அந்த taste வரல ல ..ம்ம்ம்ம்ம்ம்ம்  அதுலாம் ஒரு காலம்ன்று சொல்லிட்டு .. ம்ம்ம்ம்ம் என்ன பண்றது  அன்பரசா ............வாழ்கையில நகர்ந்தாகனுமேனுட்டு நான் நகர்ந்தேன்...

சரி வாங்கனது பத்து ரூபா கடலையா இருந்தாலும் நல்லா மெதுவா அரைப்போம்னு அதுவும் நல்லா ஒரு எடத்துல உக்கார்ந்து போற வர பொண்ணுங்கள சைட் அடிச்சிகிட்டே அரைப்போம் என்று ஒரு நல்ல இடத்தை தேர்ந்தெடுதேன் ... அதுவும்  forum  mallla சொல்லவா வேணும். சாப்ட்டு கொண்டு மொபைல் பார்த்தா  ஒரு ஈமெயில் .ஒரு மெசேஜ் ..நீங்க successfulla கடலை சப்டீங்கனு notification அனுப்பிரிபான்களோ இந்த கூகுள் பசங்க ன்னு ஓபன் பண்ணா  ஷாக் ஆயிட்டேன் .

உங்க அனுமதியோட உங்க debit கார்டு பிளாக் செய்ய பட்டது .இது எப்ப டா நடந்தது ஆகா கடலை சாப்டர நேரத்துல purse அடிச்சிட்டாங்களா னு நெனைச்சேன்.  உடனே  ஷர்ட் பான்ட் bag எல்லாம் தேடுணன் , ஒன்னும் கிடைக்கலை விஜய் சேதுபதி மாதிரி என்னா ஆச்சு வயிறு பசிச்சிது ,கடலை வாங்குனோம் ,காச குடுத்தோம் ,கடலை கிழ விழுந்திச்சி purse அக்குள்ள இருந்தது,,,, oh purse விட்டனா ..ஆகா போச்சா 1500 பணம் ,டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு,pancard ,வோட்டர் Id ...எல்லாம் போச்சா ...அப்ப்ரம் என்ன மீதி கடலைய கடுப்பு மேல செம்ம fastaசாப்டு முடிச்சன் .

சரி இருக்குற கிரெடிட் கார்ட் பிளாக் பண்ணுவோம் னுட்டு customer கேர் கால் பண்ணினா  நான் எப்படி ஹெல்ப் பண்ணட்டும்னு ஒரு பொண்ணு கேட்டுது . பேரு ஊரு accountnu எல்லாத்தியும் கடந்து பொய் இது மாதிரி என்னோட டெபிட் கார்டு பிளாக் அகிடிசினு மெசேஜ் வந்துச்சு அது வேணும்னு யாரோ பண்ணாங்கலா இல்ல யாராவது காசு எடுக்க ட்ரை பண்ணி பிளாக் ஆச்சா ன்னு கேட்டேன்.அதுக்கு அந்த பொண்ணு ஒரு third பார்ட்டி purposefulla பண்ணிருக்காங்க .

சரி அவங்க detail குடுங்கனா ,இல்லங்க அத தர முடியாது ரொம்ப confidential னு வழக்கமா trainining ல சொல்லிகொடுதத்தத ஒப்பிசிச்சது. சரி அப்போ என்னோட கிரெடிட் கார்டு பிளாக் பண்ணுங்க நு ட்டு பிளாக் பண்ணுனான் .போனது போனதுதான் .வாட் டு டு ..நு ட்டு friendukku கால் பண்ணி மச்சி என் walleta தொலைசிடண்டா ...

ஓ அப்படியா .எங்க தொலைச்ச ..சரி விடு ..னு சொன்னான் . எனக்கு அப்பவே தெரியும் நீ போற வர பொண்ணுங்கள வேடிக்க பார்த்துட்டு எங்கயாவது போட்ருப்ப ..

அட மானங்கெட்ட நாய ...நானே கடுப்புல இருக்கன் நீ வேற ..எதாவது ஹெல்ப் பண்றா நு சொன்னேன் ..customer கேர் கால் பண்ணியா .பண்ணிட்டன் மச்சி யாரோ purposefulla பிளாக் பண்ணிருகாங்கன்னு சொன்னன்ங்க ..எப்படியும் யாரோ எடுத்து வெச்சிருப்பாங்க னு சொன்னேன் .அதுக்கு அவன் மச்சி இப்போ லாம் திருட்ரவனுங்க இது மாதிரி காசு எடுத்துட்டு கார்டு பிளாக் பண்ணி உன்ன confuse பண்ணுவாங்க டா ..எடுத்தவன் என்ன மாதிரி இருந்தா பரவாஇல்லை ...அவன் உன்ன மாதிரி இல்ல இருப்பான் நு சொல்லி இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்றினான்.

நானே பேசி பொலம்பி தள்ளுணன் ..Voter  ID இருக்கு எடுத்தவன் அந்த adressku அனுப்புனா கண்டிப்பா நமக்கு வராது ஏன்னா என்னைக்கு நம்ம voter ID ல நம்ம information proper ஆ வந்துருக்கு ..ஹ்ம்ம்  காசு போனாலும் பரவா இல்லை ஆனா இந்த பான் கார்டு ,வோட்டர் ID , இதுல்லாம் நான் எப்படி திரும்ப பெற போகிறேன் னுட்டு ,இப்படி பேசி பொலம்பி ஒருவழியா அன்று இரவு தூங்கினேன் . 

நான் கடந்த சில தினங்களாக ஒரு விடயம் கடை பிடித்து வந்தேன் ...அது  எல்லாம் நன்மைக்கே ...நல்லதே  நடக்கும் என்று....ஒரு நம்பிக்கை எப்படியும் என்னுடைய Wallet என்கிட்டே வந்துடும்னு ..

மறுநாள் இது பற்றி ஆபீஸ் ல என்னுடைய நண்பரிடம் பேசினேன் .அவர் மறுபடியும் customer care கால் பண்ணி பேசு என்றார் ...சரி கடைசி ஆசை வில் டூ இட்  னுட்டு கால் பண்ணினேன் ..

அப்புறம் நடந்ததை விவரித்தேன் . அந்த customer support professional  கொஞ்சம் மூளையை பயன் படித்தி ..ஹ்ம்ம் உங்கள் டெபிட் கார்ட் ஒருவர் வழியில் கண்டெடுதுள்ளர் மற்றும் பிளாக் பண்ணியுள்ளார் ..


நான் உடனே அவர் detail எதாவது கொடுத்தாரா என்றேன் . ஆம் அவர் பெயர் கிரிதர் ..மற்றும் மொபைல் நம்பர் கொடுத்தார் .நம்பரும் ஷேர் பண்ணுனாங்க 

உடனே அந்த நம்பருக்கு கால் பண்ணினேன் ..

எஸ்  tell me Anbarasan  how are you ..நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் ..எப்டி தெரியும்னு கேட்டேன் ..Truecaller app மூலம் நு சொன்னார் .
அப்பரம் அவர்  உன்னை தொடர்புகொள்ள பல வழிகளில் முயற்சித்தேன் ....
உ ன்னுடைய ஆபீஸ் மற்றும் employee ID உ ன்னுடைய ஆபீஸ் பஸ் identity கார்ட்ல இருந்தது ..அதை வைத்து கொண்டு முயற்சி செய்தேன்  .....அதற்கும் பலன் இல்லை நாங்கள் நாளை சொல்லிவிடிகிரோம்னு சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டார்கள் என்றார் ...
..அதனால் வேறு வழில்லாமல்உனது  debit கார்டு ஒன்றை பிளாக்செய்தோம் என்றார் ..... .அப்பொழுது நான் எ னது பெயர் மற்றும் மொபைல் நம்பர் கொடுத்து இந்த கார்டு owner கேட்டாங்கனா சொல்லுங்க னு சொல்லி பிளாக் செய்தேன்  என்றார் அந்த மாமனிதர் ...

அப்போதான் நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன்..

அவர்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 அன்பரசன்........,,,,,, நான் இங்க கோரமங்களா ல இருக்கேன் என்னால வர முடியாது என்னோட wife அங்க manyata tech parkla  IBM ல வேலை செய்றாங்க அவங்ககிட்ட வாங்கிகொள்ளுங்கள் ..இப்போ அவங்க மொபைல் நம்பர் தரேன் அவங்க பெயர் திவ்யா என்றார் ..

உடனே நம்பர் வாங்கி கிரிதர் wife கு கால் பண்ணி ஹலோ நான் அன்பரசன் பேசுறேன் இதுமாதிரி கிரிதர் உங்க நம்பர் கொடுத்தார் என்னோட wallet உங்களிடம் இருந்து பெற்றுகொள்ள சொன்னார் நு சொன்னேன் ..

ஹலோ யார் நீங்க உங்க wallet என்னிடம் இல்லை என்று ஒரு மிர்ரட்டுனாங்க .இல்ல mam கிரிதர் தான் சொன்னார் ..அப்போ அவர்கிட்ட கேள்ளுங்க ..இவரு மாட்டும் ரோட்ல purse தொலைப்பராம் நாங்க கொடுக்கணுமாம் ணு  செம்ம களாய் ...எனக்கு அல்லு இல்ல ....

அப்புறம் நான் உன் wallet a தர முடியாது ...நீ போ ,,நான் தான்  wallet a  வைச்சுருக்கன் ஆனால் தர மாட்டேன் நு சொன்னங்க ...சரி குடுங்க ப்ளீஸ் நு கெஞ்சினேன் ...நீ எவ்ளோ ப்ளீஸ் பண்ணாலும் தர முடியாது ..அவ்ளோ அலட்சியம் ன்னு கொஞ்சம் கதற விட்டாங்க ...கடைசியா சரி உன் ஆபீஸ் எந்த பிளாக் என்றார்கள் நான் c4 என்றேன் ..என்னால அவ்ளோ தூரம் வர முடியாது நீ directa என்னோடிய office பில்டிங் நுழைவு வாயில் வந்து கால் பண்ணு ...ஆனா நான் தர மாட்டன்னு சொல்லிட்டாங்க ...

நம்ம எப்படியாவது கால்ல விழுந்தாச்ஹம் வாங்கிவிட வேண்டும் என்று அவர்களை சென்று சந்திதேன். ஒரு ஐந்து நிமிடம் காத்திருந்தேன் .அவர்கள் வந்ததும் நான் தர முடியாது...


நான் ஒரு பம்பு பம்பிநேன்....ப்ளீஸ் குடுங்க என்றேன் ...நான் குடுக்க முடியாது ..உனக்கு என்ன அவ்வளவு அலட்சியம் ...நான் தர முடியாது ..ப்ளீஸ் நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க என்று கேட்டேன் .. இது வரை நான் தொலைச்சதே இல்லை ..என் லைப் ல இதுதான் முதல் தடவை தொலைத்துவிட்டேன் என்றேன் ...அது தான் தொலைசிட்டல்லனுசொன்னாங்க ...

அப்பறம் நான் சிரிச்சி கிட்டே ரெண்டு கையையும் கட்டி கொண்டு சொல்லுங்க நான் என்ன பண்ணனும் ...ஏன் என் கிட்ட கேக்குகுற ,,போய் எதாவது பண்ணு ..னு  சொல்லிகொண்டே எனது wallet திருப்பி கொடுத்தார்கள் ...எல்லாம் சரியாய் இருக்கானு செக் பண்ணிக்கோ னு சொன்னங்க ..நான் ஒருத்தர் தொலைச்ச பொருள திருப்பி கொடுக்குராங்கன்னா நான் செக் பண்ணனும் அவசியம் இல்ல னு டயலாக் விட்டேன் ..

சரி சரி போதும் நிறுத்து ...நான் ஒரு 1000 எடுதுருந்தா  அப்ப என்ன பண்ணுவ..என்று மறுபடியும் நல்லா ஓட்டி விட்டார்கள் ....
ஏன் ஒரு போன் நம்பர் , அட்ரஸ் detail எதுவுமே எழுதி வைக்கமாடீன்களா என்றார் ..இல்ல நான் எழுதி வைத்த மாதிரி ஒரு ஞாபகம் என்று சொல்லலாம்னு நெனைச்சேன் ....எங்க இவங்க குடுத்த wallet a  புடிங்கி  வைச்சிபாங்கலோன்னுட்டு அடக்கி வாசிச்சேன் ...

நிஜமா நேத்து நீ நல்லா தூங்கினியா னு கேட்டாங்க ...first ஒரு ஒரு மணி நேரம் கொஞ்சம் tensed ஆ இருந்தேன் அப்பறம் நடந்துடிச்சி ...சரி எப்படி documents பான் கார்டு ,வோட்டர் ID  எப்படி reapply பண்றத பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன் ...பட் மனுசுல ஒரு நம்பிக்கை எப்படியும் இன்னைக்கு என் ஆபீஸ் போனா கிடைக்கும் என்று நம்பினேன் ...

அப்புறம் எப்படி எங்க நம்பர் கிடைச்சுது என்று கேட்டார்கள் ..உங்க ஆபீஸ் மூலம் கேட்டீங்களா என்றார் ..நான் சிட்டி பேங்க் customer கேர் மூலம் உங்க கணவர் கிரிதர் நம்பர் அறிந்து கொண்டேன்...பிறகு உங்களை தொடர்பு கொண்டேன் என்றேன் ...

இப்போ சந்தோசம் தான ன்னு சொன்னங்க.. நான் ரொம்ப சந்தோசம் ...மிக்க நன்றி ...அப்பறம் அவங்கள பத்தி கொஞ்சம் தெரிந்து கொண்டேன்...அந்த wallet பார்த்தேன்.. ஒரு மகிழ்ச்சி ,,,கிடைக்காதது  கிடைப்பதை விட தொலைச்சது கிடைப்பது ஒரு விதமான ஆனந்தம் ...என் மனதில் அந்த தம்பதியர்கள் நீடுடி வாழ மனதில் வாழ்த்திக்கொண்டு நடக்க தொடங்கினேன் ...அவர் கணவருக்கு  கால் பண்ணி என் மனமார்ந்த நன்றியை தெரிவித்தேன் ...

அப்பொழுது தான் நம் மண்ணில் உதவும் உள்ளங்கள் இன்னும் இருக்கிறார்கள் ...நாமும் அது போன்று இருக்க வேண்டும் என்று மறுபடியும் எனக்குள் நினைவு படுத்தினேன் ...


 பிறகு ஒரு இரண்டு நாட்களுக்கு பிறகு .நான் என்னுடைய பெயர் , மொபைல் நம்பர்,emergency contact தந்தையின் பெயர் மொபைல் நம்பர் குறுப்பிட்ட ஒரு சீட்டை என் walletla வைத்து விட்டு ...நான் என் walletla என்னுடைய details வைத்து விட்டேன் என்று கிரிதர் கு  கால் பண்ணி சொன்னேன் ...மற்றும் அவர் மனைவி திவ்யா அவர்களுக்கு  whatsappla மெசேஜ் பண்ணினேன் ...மேலும்  நன்றி சொன்ன்னேன் ...ரொம்பவும் சந்தோசம் ..நான் செய்ததில் என்ன இருக்கு  இட்ஸ் ஹுமன் nature னு சொன்னங்க  ..நீயும் இதை செய் என்றார் ... நான் சொன்னேன் கண்டிப்பாக ...

அதனால் நண்பர்களே ...எவ்வளவு வேலை இருந்தாலும் இதை படித்த உடன் உங்கள் விலாசம் மற்றும் போன் நம்பர் உங்கள் walletla இருப்பது அவசியம் ...நான் பட்டு தெரிந்ததை உங்களுக்கு நீங்கள் படாமல் இருக்க இந்த பதிவை ஷேர் செய்கிறேன் ...