எது சுதந்திரம் ?



                                 எது சுதந்திரம் ?

வருடங்கள் ஓடுகின்றன .கனவுகள் சந்தேகிகின்றன ....இவனுங்க நிஜமாலுமே சுதந்திரமா இருக்கிறார்களா என்று ?  

எது சுதந்திரம் ?

 உன்ன உணவு,உடுக்க உடை ,உறங்க உறைவிடம் இம்முன்றும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் என்று கிடைக்கிறதோ, அன்பிற்கு தவிர வேற எதுக்கும் அடிமையாக  இல்லாமல் என்று வாழ்கிறோமோ அன்று தான் உண்மையான சுதந்திரம் .

இவை கிடைக்க ஒவ்வொருவரும் கடினமாக உழைத்து நாமும் முன்னேறி ,நம் சமூகமும் முன்னேற உதவுவோம் .

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் .வாழ்க தமிழ் வளர்க பாரதம் .





ஒரு குடிமகனின் கோபம் ,தவிர யாரையும் புண்படுத்த அல்ல 



சமீப காலமாக தமிழ் நாட்டில் மது ஒழிப்பு என்ற ஒரு விஷியத்தை அனைவரும் கையில் எடுத்து கொண்டுளுள்ளனர் .கட்சிகள் ஆர்ப்பாட்டம்,மாணவர்கள் ஆர்ப்பாட்டம், எல்லா தொலைகாட்சியிலும் இதே செய்திதான் 
தொல்லை தருகின்ற கட்சிகளின் செய்திகளே தொலைகாட்சி ஆகிவிட்டது .


1. இவ்ளோ நாள் எங்க போனார்கள் , இப்போ எங்கிருந்து வருகிறது இந்த அக்கறை இந்த கட்சி காரர்களுக்கு.

2.முன்பு இப்படிதான் ஈழம் பற்றிய பிரெச்சனை கையாண்டார்கள் நம் தலைவர்கள் இப்பொழுது இதை எடுத்து கொண்டார்கள் . தூண்டி விடுவதும் ,பிரெச்சனை செய்வதுமே இன்றைய அரசியல் என்று நல்லா அரசியல் கற்று கொடுக்கிறார்கள் .

3.கடைசிவரை பாதிப்பது என்னவோ நம் மக்கள் சாதாரண மக்கள் தான். நாடாண்ட மன்னர்கள் பிறந்த ஊர் ,தலை சிறந்த  தலைவர்கள்  இருந்த ஊர் .

4.யாருக்கு தான்  கோபம்  இல்லை ,தாலியையும் ,கணவனையும் இழந்த பெண்கள், குடிகார தகப்பனால் அவமானம் படும் குழந்தைகள் , இவர்களுக்கு இல்லாத கோபம் கட்சி காரர்களுக்கு பொத்துக்கிட்டு வந்துவிட்டதோ...

5.நாம் ,நமது இனம் குடித்து,குடித்து சோம்பரிகளாய்  ஆனது தான் மிச்சம் ,நாடும் மலட்டு தன்மையாய் போய் கொண்டிருக்கிறது .

6.சினிமா காரன் குடிக்கிறான் ,அதனால நான் குடிக்கிறான் சொல்றவங்க அவன் கோடி கணக்குல சம்பாதிக்கிறான்  நீ சம்பாரிச்சிட்டு சந்தோசமா குடி அடுத்தவனுக்கு எடைஞ்சல் இல்லாம குடிச்சி சாவு .

7.வெள்ளைக்காரன் குடிக்கிறான் ,அவன் தட்பவெட்ப்ப சூழ்நிலை அப்படி அதுவும் அவன் அளவா குடிக்கிறான் . நீ அப்படி குடிக்கிறியா..

8.இதுல இந்த காலத்து பொண்ணுங்க வேற , பசங்க குடிகளைனா நீ வேஸ்ட் , கண்ட கண்ட படத்த பாத்துட்டு dailogue  வேற...முன்னலாம் குடிக்கிறான் சொன்ன தீண்ட தகாதவர்கள் ,இப்போ குடிக்களான தீண்டத்தகாதவர்கள் லிஸ்ட்ல கூட சேர்க்க மாட்றாங்க .

9. என்னமோ எதை விதைகிறோமோ அதை தான் அறுவடை செய்வோம்.நாம் நம் வாழ் வியல் நெறிமுறை கட்டமைப்பை  (System ) கொஞ்சம் கொஞ்சமாக  இழந்து கொண்டிருக்கோம் .அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் . முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் வழி நடந்து வந்தவன் தான் தமிழன் .அதையும் மறந்தோம்.

10.வேறொரு நாடு தேவையில்லை நம்மை அழிக்க ,நாமளே போதும் ,ஒவ்வொரு செயல் சேயும் போதும் நன்கு பகுத்து அறிந்து முன்னோர் வழி நடந்தால் தன் அடுத்த தலைமுறைக்கு நாம் அட்லீஸ்ட் கொஞ்சம் விட்டு செல்ல முடியும் இல்லை நோய்வாய்பட்டு , நம் பலத்தை இழந்து சின்ன நாடும் நம்மை அடிமை படுத்தும் நிலைமைக்கு போய் விடுவோம் .

ஆதலால் போராட்டம் என்ற பெயரில் பொதுசொத்தை நாசம் ஆக்குவதும் ,
தற்கொலை செய்வதும் , அடுத்தவர்களை தூண்டி விடுவதும் , மேலும் மேலும் ப்ரேச்சனையை வளர்ப்பதும் நல்ல சமூகத்துக்கு அழகல்ல .

திருடனை பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .குடிகாரனா பார்த்து திருந்தா விட்டால் குடியை ஒழிக்க முடியாது .

கடமை அறிந்து குடியை மறந்து ,சிந்தித்து செயல் படுவோம் ..தமிழா விழித்துக்கொள்.