அசிங்கப்பட்டான் அன்பரசன்


              அசிங்கப்பட்டான் அன்பரசன் 


நாம் பல நேரங்களில் நிறைய நல்ல  விஷியங்கள் நிறைய பேரிடம் இருந்து கற்றுகொள்வது  உண்டு . அதுவும் குறிப்பாக சின்ன பசங்களிடம் இருந்து நிறைய கற்று கொள்ளலாம் . சின்ன பசங்களிடம்  பேசும் போது  ரொம்ப  கவனமாக இருக்க வேண்டும்  அதுவும் இப்போ உள்ள  பசங்க ரொம்ப ஷார்ப் , கழுவி  மூஞ்சி மேல துப்பிட்டு போய்டுவாங்க,அவ்வாறு நடந்த ஒரு சம்பவத்தை பற்றி உங்களோடு பகிர்ந்து  கொள்ள ஆசை படுகிறேன்

நான் சென்ற வாரம் ஊருக்கு சென்றிருந்தேன்.என்  அக்கா பையன் முகிலன் விடுமுறைக்காக மாமா வந்துருக்காங்க  நான் பார்க்கணும் னு சொல்லிட்டு எங்க வீட்டிற்க்கு வந்தான். அவன் வரவுவதர்க்கு காரணம் பாசம் இல்ல nickledon சேனல் டிவி பார்க்க மற்றும் அம்மா தொல்ல அப்பா தொல்ல இல்லாமலிருக்க.
ஐந்தாம் வகுப்பு முடித்து விட்டு விடுமுறை ...

சும்மா இருக்குமா சுழி ...

பயபுள்ள காலைலேர்ந்து சைக்கிள் எடுத்து சுத்திகிட்டே இருந்தேன் .
எங்க அண்ணன் பையன் கூடிகிட்டு விளையாடிகொண்டிருந்தான் .

என் அப்பா சைக்கிள் வேணும் இவன் எங்க எடுத்துட்டு போனான் என்றார்  .

எங்க அம்மா அவன் எங்க நம்ம பேச்சை கேக்குறான் ...எங்கயோ போயிருக்கான் னு சொன்னாங்க . சற்று நேரம் கழித்து அண்ணன் வீட்டு ஒரு பெரிய மரக்கட்டைய எடுத்துட்டு ( ரீப்பர் ) வந்தான் . 

மாமா மாமா எனக்கு கிரிக்கெட் பேட் செஞ்சி குடு...

நான் அதெல்லாம் முடியாது உன்ன எவன் அண்ணன் வீட்டு மரக்கட்டைய 
எடுத்துட்டு வரசொன்னது , போய் மொதெல்ல அத குடுத்துட்டு சைக்கிள்ல நிறுத்து தாத்தா வெளியில போகுனும்னு சொன்னேன்.

எங்க அம்மா ரெண்டு கத்து கத்திவிட்டு போய்ட்டாங்க .

எங்க அப்பா வந்து "டேய்  இருக்குறது ஒரு சைக்கிள் அதயும் வேல வச்சிடாத " னு  அட்வைஸ் ...அதுக்குலாம் தலைவரு கண்டுக்கல போய்...அந்த கட்டய குடுத்துட்டு வந்து சைக்கிள குடுத்துட்டான்.

பிறகு ஆளு abscond ஆணவந்தான் சுமார் 12 மணிக்கு வீட்டிற்க்கு இன்னொரு மரக்கட்டையை எடுத்துக்கொண்டு வந்தான் .

நான் கடுப்புடன் அவனை பார்த்தேன் "மாமா இது நம்ம மரகட்டைதான் " என்று சொல்லி என்னை பேசவிடாமல் பிரேக் போட்டான் .....

நல்ல கொளுத்தும் வெயிலில்பையன் வேர்க்க விருவிருக்க மரக்கட்டையை எப்படியாவது கிரிகெட் பேட் செய்ய வேண்டும் என்ற குறிகோளோடு வெட்டிகொண்டிருந்தான் .

எங்க அம்மா வந்து செம்ம திட்டு நடு வெயில் என்னடா பண்ற.... சொல்ற பேச்சியே கேக்க மாற்ற ,,....கைய க்கிய வெட்டிக்காத டா..........................சாப்டாம
வெட்டிகிட்டு இருக்க வந்து சாப்டு .........

நான் துணி துவைத்து கொண்டிருந்தேன் , அம்மா போன் எடு மா அவுங்க அப்பாவுக்கு போன் போடுவோம் ....இவன்  திருந்தவே மாட்றான் என்றேன்

நாங்க ரெண்டு பேர் கத்ரத கண்டுகொள்ளாமல் "இவங்க இன்னும் எத்தனை வருஷம் தான் இந்த பழைய டயலாக் பயன்படுத்துவாங்கலோ ...இவங்க திருந்தவே மாட்டங்க போல" என்று எண்ணிக்கொண்டு தொடர்ந்து அவன்  மரக்கட்டையை வெட்டியது எங்களுக்கு பளிச்சின்னு புரிந்தது .

சரி இவன் நம்ம சொல்றத கேட்க மாட்டான்  நம்ம தான் பைத்தியம் அகிடுவோம்னு என்று என் அம்மா சமைக்க சென்று விட்டார்கள் .

இவன் நம்மல மதிக்க மாட்டான் எதுக்கு அசிங்க படனும்னு நான் என் வேலைய தொடர்ந்தேன்.

அவன் வெட்டும்போது அந்த கட்டை நல்ல இடத்தில் வைத்து வெட்டாமல் அங்கும் இங்கும் எடுத்துக்கொண்டு வெட்டிகொண்டிருந்தான் .

இதை பார்த்த பக்கத்துக்கு வீட்டு காரங்க அட்வைஸ் பண்ணினாங்க அதையும்,
அவன் கேட்கலை...போராடி வெட்டி கொண்டிருந்தான் .அதை ரெண்டு துண்டாக்க போராடிக்கொண்டு காலால் உதைத்தான் ..

அவன் போராடுவதை கண்டு

டேய் முகில் நான் துணி துவைத்து விட்டு உனக்கு பேட் செய்து தருகிறேன் என்றேன் .

தொடர்ந்து வெட்டினான் ...அதுவும் அவன் வெட்டும் போது கத்தி துள்ளியது ...எனக்கு கோவம் தலைக்கேறியது...

டேய் உனக்கு அறிவு இருக்கா ...இப்டி சொல்ல சொல்ல கேக்காமல்
வெட்டிகொண்டிருக்க்க ....என்றேன்

அதையும் கண்டுகொள்ளாமல்.....

மாமா அறிவு இருக்குரதனாலதான் நான் வெட்டுறன் என்று சொல்லி பொசுக்குனு அசிங்க படித்திடான் ...

நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன் ...சுத்தும் முற்றும் பார்த்தேன் யாராவது பார்துட்டாங்கலானு ....நல்ல வேலை யாரும் இல்ல ....அப்படா  என்று பெருமூச்சி விட்டேன் ....

அவன் தொடர்ந்து அதை வெட்டினான் ....அதை ரெண்டு துண்டாக்கிவிட்டு தொடர்ந்து கைப்பிடி செய்து கொண்டிருந்தான் .

நான் துணியை துவைத்து விட்டு குரங்கு புடுங்கி போட்ட இளனி மூணு  இருந்தது ...நல்ல வெயில் வெட்டி குடிக்காலம் அவனுக்கும் வெட்டி குடுக்கலாம்னு அவனிடம் ...

இவன் வேற கடுப்புல இருக்கான் கத்தியை  கேட்டா மறுபடியும் அசிங்க படித்துடுவானோ என்று எண்ணிக்கொண்டு அக்கம் பக்கம் யாரும் இருக்கங்களான்னு பார்த்துட்டு

முகில் முகில் என்று அன்பாய்  பொறுமையாய் மெல்லிய குரலில் இங்க வாயேன் என்றேன் .

என்ன மாமா ...என்று கடுப்பான tonela கேட்டான் ..

டேய் இந்த கத்தி செத்த குடுறா நம்ம இளனி வெட்டி குடிக்கலாம் ..

எனக்கு வேணாம் மாமா ....கோவத்துடன் சொன்னான் ....

டேய் எனக்கு வேணும் டா ...கொஞ்சம் குடுடா ...ஐயோ கெஞ்ச வைக்குரானே ....
என்று எண்ணிகொண்டு அவனிடம் கேட்டேன் ...

ஒருவழியா கத்தியை வாங்கி முதல் இளனியை வெட்டினேன் ...டேய் போய் சொம்பு எடுத்துட்டு வான் உனக்கு குடிக்க என்றேன் ...

எனக்கு வேணாம் மாமா ...என்றான் ...

வேணாம்னா போ...என்று கத்தி இருக்கும் துணிச்சல்ல நான் அந்த இளனியை அண்ணாந்து அப்படியே குடித்தேன் ...குடித்து முடித்து விட்டு பார்த்தால் எனக்கு முன்னால ஒரு பரிதாபமான மூஞ்சியோட பக்கத்துக்கு வீட்டிற்க்கு  வேலை செய்ய வந்த ஆள் நின்று கொன்றிருந்தார் .
என்னங்க வேணும்னு கேட்டேன் ...மீன் வாங்கியாந்திருக்க்காங்க ....கொஞ்சம் உங்க கத்திய குடுங்க அருக்கனும் என்றார் ....

நான் அருகாமையில் இருக்கும் முகிலனை  பார்த்தேன் ...ஒரு நிமிடம் வந்த ஆளை பார்த்தேன்.....சிரிச்சேன் ....

என்னங்க இப்படி பார்கிறீங்க என்றார் ...

நான் அதற்க்கு நானே  கிரிக்கெட்  பேட்  செஞ்சிகிட்டு  இருந்த முகிலன் கிட்ட கடன் வாங்கி இளனி வெட்டிகிட்டு இருக்கன், நீ என்கிட்ட கத்தியை கேக்குற அத நெனைச்சன் ....சிருச்சன் னு சொன்னேன்.

முகிலனை  பார்த்து டேய் அவங்க மீன் அறுக்க கேக்குறாங்க டா ஒரு அரை மணி நேரத்துல குடுத்துடுவாங்க டான்னு கேட்டேன் ....

பையன் உம்ம்னு மூஞ்சியை வைத்க்கொண்டு உர்ர்ர்ர்ர்ர்ர்னு என்னை பார்த்தான்...

எங்க நம்மள வந்துருகிறவர் முன்னால அசிங்க படிதிடுவானோ என்னவோ னு 
அவரிடம் நீங்க எடுத்து டு போங்க சீக்ரமா கொண்டு வந்து கொடுங்க என்றேன் 

மேலும் முகிலன் பேட் செய்யணும் மறக்காமல் கொண்டு வந்து குடுங்க என்றேன் ...

அவரு வேல முடிஞ்ச உடனே கொண்டு வருகிறேன்னு கத்தியை பெற்றுக்கொண்டு சென்று விட்டார் .

முகிலனக்கு ஆத்திரம் மாமா கத்தியை கொடுத்துவிட்டார்  என்று ..

என்னை பார்த்தான் ... என்னவாம் ,,யான் அவங்க அருவாமனை ல அறுத்தா மீனு அறுக்க முடியாதா கத்தி தான் வேணுமா .....என்றான் ...

விடு முகில் அந்த கத்தி வெண்ணைகூட வெட்டாது ...நீ வேண்ணா பார்  அவரு அந்த கத்தியை திரும்ப கொண்டு வந்து கொடுதிடுவார்னு சொன்னேன் ...

வெண்ணை கூட வெட்டாது னு சொன்னதும் சிரிப்பு அவனுக்கு வந்தது ...control பண்ண முடியாம சிரிச்சான் ...அவன் கோவம் தணிந்தது ...

அப்படா இவன சமாளிக்க எப்படியலாம் பேச வேண்டியுருக்கு என்று நினைதேன் .

பிறகு அவன் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் பார்க்க போய்ட்டான் ....

நான் அதை மறந்து விட்டேன் ஆனால் அவன் கத்தி கடன் வாங்கி எப்படியோ பேட் செய்து விட்டான் ...

அவன் விடா முயற்சியை கண்டு வியந்தேன் ...எத்தனை பேர் தடுத்தார்கள் ...எவ்வளவு போராட்டம் அந்த பேட் செய்வதற்குள் ....அனால் அவன் அதை செய்து முடித்து விட்டு மாமா ...இங்க பாரு என்னோட புது பேட் ...என்று அளவில்லா சந்தோஷத்துடன் சொன்னான்.

அப்பொழுது தான் அந்த கத்தி வாங்கிய நபர் திரும்ப கொண்டு வந்து குடுத்தார் 
நான் எழவுக்கு வா யா  னா கருமாதிக்கு வரியே என்று எண்ணிக்கொண்டு 
எங்க ஆள் பேட் செஞ்சி உலக கோப்பையே வாங்கிட்டான் னு பெருமையா 
சொன்னேன் ..

Moral of the Story :

1.நாம் சாதிப்பதில் சின்ன பசங்கள போல பிடிவாதமாய் இருக்க வேண்டும்.
2.தேவை இல்லாமல் சின்ன பசங்களிடம் வாயை குடுத்து கண்டத  புண்ணாக்கி கொள்ள கூடாது .