கனவு இல்லம்

                                                   

                                               கனவு இல்லம்



அடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரசியம் படங்களில் மட்டுமே பார்த்திருப்போம் . சில சமயங்களில் நம் வாழ்கையில் கூட நடக்கும். என்ன  தான் நாம் பல நாட்கள் plan பண்ணி சில விஷயங்கள் செய்யனும்னு நெனைச்சாலும் அது நடக்கும் நேரத்தில் தான் நடக்கும் அதுவும் எதிர்பாராமல் நடக்கும் என்பது உண்மை. அப்படி ஒரு விஷயத்தை பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன் .

எனக்கு சிறுவயதிலிருந்தே இரண்டு கனவுகள் இருந்தது.
ஒன்று ஒரு அழகான, திட்டமான வீடு என் சொந்த ஊரில் கட்ட வேண்டும் .அதுவும் என் பாட்டி  "தனக்கோடி" என்ற பெயரில் இருக்க வேண்டும்.
இரண்டு  எதாவது நம்மால் முயன்ற மாற்றம் அழிந்துகொண்டு இருக்கும் விவசாயத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் .

என்னுடைய முதல் கனவு எனக்கு மட்டும் அல்ல என் குடும்பத்தில் உள்ள அனைவரின்  கனவு ஆகும்.

முதலில் என் குடும்பத்தாருக்கும்,உறவினர்க்கும், என்னக்கு பாடம் சொல்லி தந்த அணைத்து ஆசிரியர்களுக்கும் குறிப்பாக (Sister AmaliShantha) அவர்களுக்கும்,எனக்கு எப்பவும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உதவும் எல்லா நண்பர்களுக்கும்,வேலை செய்கின்ற அலுவலகத்தில் உன் முன்னற்றதிர்க்கு உறுதுணையாக இருந்த அணைத்து சகோதர சகோதரிகளுக்கும், மேலும் கஷ்ட காலத்துல எனக்கும் எங்க அப்பாவுக்கும் கடன் கொடுத்த,கொடுக்கின்ற எல்லா நல்ல உள்ளங்களுக்கும் , லோன் கொடுத்த எல்லா பேங்க் களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!!! நன்றி!!!நன்றி!!!
(பாஸ் நம்ம என்ன விஜய் சேதுபதியா ,விஜய் டிவி லாம் கூபிடமாட்டாங்க அதான் இதுலியே சொல்லிடறேன்)

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிபார்னு..யப்பா ...

ஒரு நல்ல பெற்றோர்  தன் குழந்தையை  பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். அது போல தாங்க வீடு கட்டுவதும். என்னதான் மாடர்ன் வோர்ல்ட்ல கட்டின பிளாட் வாங்கினாலும் நாம பார்த்து பார்த்து கட்டும் வீடிற்கு ஈடிலிங்க.

எல்லாரும் சொன்னங்க ஏன் இங்க கட்றீங்க ,டவுன் ல கட்டலாம்ல , பிளாட் வாங்கலாம்லனு ..ஆனா சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா..சொந்த ஊர்ல வீடு இருப்பது போல வருமா.

எவ்வளவோ புதுமனை புகுவிழா சென்றிறுப்போம் ஆனால்  கவனித்து இருக்க மாட்டோம் . நம்ம வீடு கட்டும் போது உலகுத்துல எங்க வீடு கட்டினாலும் அது என்ன டிசைன், இது என்ன மாடல் னு பாவம் அந்த வீட்டுக்காரங்க செத்தாங்க . பத்தாதக்கு கூகுள் வேற  கதரிடிச்சி போங்க...என்னமோ பங்களா கட்டுவது போல இருக்குற எல்லா வெப்சைட்டும் அலசி நானே ஒரு பிளான் ரெடி பண்ணினேன்அது படும் கேவலமா இருந்தது.அத்தோடு நான் பிளான் போடறதை கைவிட்டேன் .

மூன்று வருடங்களுக்கு முன்னால் ஜோசியக்காரர் ஒருவர் நல்ல நாலுன்னு சொல்ல ,மனை பூஜை பண்ணினோம்.கொய்யால மன பூஜை போட்டதளிருந்து ஒரு வருடத்துக்கு ஒன்னும் நடக்கல . ஏன்டா பூஜை பண்ணினோம் தோனுச்சு. சரி நமக்கும் வீடுக்கும் ராசியே இல்ல போல னு  நொந்து போய் எங்க அம்மா நாம பேசாம ஒட்டு வீடு கட்டிடலாம்னு சொன்னங்க.ஆனா எனக்கும் ,எங்க அப்பாவுக்கும் கட்டுனா மெத்தை வீடுதான் இல்லனா இல்ல(பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்)  என்ற முடிவோடு இருந்தோம் .


சரியாக ஒருவருடம் கழித்து எங்க அம்மா கால் பண்ணி , அரசாங்கம் வீடு கட்ட மானியம் தராங்கலாம் , போட்டோ புடிசிகிட்டு போயிருக்காங்க , உடனே வா கடகால் போடணும் அப்ப  தான் மானியம் கிடைக்கும்,  நாம கொத்தனார் , engineer  எல்லாம் பார்க்கணும் சொன்னாங்க . அடிச்சிக்கோ புடிசிக்கோனு கெளம்பி ஒரு என்ஜினியர் கிட்ட போய் வீடு பத்தின knowledge ஒன்னும் இல்ல, நான் 2 BHK ரொம்ப சிம்பிளா திட்டமா ஒரு வீடு பிளான் வேணும் சொன்னேன். அவரு ஒரு பிளான் போட்டு தந்தார். கொத்தனார் பார்த்துகொடுத்து விட்டு நான் சென்று விட்டேன்.கடகால் போட குழி போடும் போது கொத்தனார் முன்னால விளக்கு வைக்க ரூம் இல்ல என்று சொல்ல இன்னும் கொஞ்சம் பிளான்  extend  ஆனது. குழி தோண்டியாச்சு.

இதை அறிந்த என் மாமா பிளான் நல்லா இல்ல என்னோட Friend engineer இருக்கார் னு சொல்ல அவரு வாஸ்து சாஸ்து படி ஒரு பிளான் போட, வீடு அளவு இன்னும் கொஞ்சம் பெருசாச்சு. பட்ஜெட் அதிகரித்தது . இதுல கொடும என்னன்னா நான் முதல் முதலில் பார்த்த engineer தான் அவர்.அப்புறம் பிளான் புடிச்சி போய் அதே மாடல் ல நோண்டிய குழியில் கடகால் போட்டோம்.எவ்வளவு குழப்பங்கள் கல் வாங்குவதில்,கம்பி வாங்குவதில் ,மற்ற எல்லா பொருட்களும்.

ஹோம் லோன் கிடைக்காம பர்சனல் லோன் போட்டு ,அங்க இங்க உருட்டி பெரட்டி வீடு கட்ட ஆரம்பித்தோம் . எப்போவுமே வீடு மட்டும்  நாம ஒரு பட்ஜெட் போடுவோம் ஆனா அது ஒரு பட்ஜெட்ல முடியும். எனக்கு 2014 தை மாசம் குடி போக வேண்டும் என்பது குறிக்கோள் .என்னால் இயன்ற முயற்சியை செய்தேன்.வீடும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது .செப்டம்பர் மாதம் விநாயகர் சதூர்த்தி அன்று வீட்டின் தளம் போட முடிவு செய்து எல்லோரும் கூடினோம் .ஏன்  என்றால் தளம் போடும் நாள் ஒரு கோயில் கும்பாபிஷேகம் பண்ணுவது போல என்று பெரியவர்கள் சொல்வார்கள் .அன்று நல்ல நாள் என்பதால் நெறைய பேர் தளம் போட்டார்கள் .அதனால் அந்த தளம் போடும் எந்திரம் ரெண்டு வீடு ஒப்பு கொண்டனர். அந்த contract மேஸ்திரி அமர்த்தினார் . காலையில் ஊர்ல வேற வீடு , மதியம் எங்கள் வீடு. அன்று பார்த்து வானம் மழை பொழியும் தருவாயில் இருந்தது. எங்களுக்கு ஒரே படபடப்பு இவ்ளோ செலவு பண்ணி இன்னைக்கு போய் மழை வந்தால் எல்லாம் வீணாகிவிடுமே என்று .ஒரு பக்கம் wiring வேல நானும் என் மாமாவும் பார்த்துகொண்டிருந்தோம் ,மறு பக்கும் தளம் போட machine ரெடியாகி கொண்டிருந்தது .ஆட்கள்  வர தாமதம் ஆனது .வானமோ இருட்டி கொண்டிருந்தது . நானும்  என் தந்தையும் பிளான் cancel பண்ணலாம் னு நெனைச்சோம் .கோவத்தில் மேஸ்திரியை திட்டினோம். அவரு எல்லா திட்டையும் வாங்கி விட்டு உங்கள் வீடு எந்த குறையும் இல்லாமல் ஒட்டிக்கொள்ளும் என்று ரொம்ப கூலாக சொன்னார் . எங்க அக்கா,அம்மா , மற்றும் சிலர் சொன்ன தேதியில் நடக்கணும் என்பதால் பிளான் cancel பண்ணகூடாது என்று தெளிவாக இருந்தார்கள். வேலை வேகம் வேகமாக நடந்தது. மழை வந்தால் என்ன பண்ணுவது என்று நெறைய தார் பாய் ஊரில் உள்ளவர்களிளிடம் வாங்கி வைத்தோம் .கடவுளை வேண்டி கொண்டோம் மழை வர வேண்டாம் என்று ஆனால்
...................................................................................................................................................................
...................................................................................................................................................................
மழை வந்தது.சும்மா விடுவோமா மேஸ்திரிய செம்ம காட்டு காட்டினோம் .அப்பவும் அவரு அசால்டா வீடு நல்லபடியா ஒட்டிக்கொள்ளும் என்றார் . எங்க அம்மா அந்த மழை பொழிகிற கேப்ள ஆளுங்களுக்கு

"மழை விடாது போல போட்ட டீய வீணாக்க வேணாம் எல்லாம் டீய குடிங்க"

என்று ஆளுங்களுக்கு கொடுத்தாங்க.இங்க தான் எங்க அம்மா வோட டைம் மற்றும் resource management skill பார்த்து  வியந்தேன் .சரியாய் ஒரு பதினைந்து நிமிடம் கழித்து மழை நின்றது .யார் செய்த புண்ணியமோ அன்று எங்கள் வீட்டை மிகபெரிய இழப்புலிருந்து காப்பற்றியது.இரவு ஏழு மணி வரை தளம் போட்டார்கள் அன்றுதான் நிம்மதியான தூக்கம் வந்தந்து ஏன் என்றால் தளம் போட்டுவிட்டால் பாதி வீடு முடிந்ததுபோல.

பிறகு மெதுவாக ஒவ்வொரு வேலையும் நடந்தது .நாங்க வீட்ட சும்மா போட நினைத்தாலும் அதுவா வேல நடக்க ஆரம்பிக்கும் .எங்கள் குடும்ப தெய்வம், எங்கள் பாட்டி( அப்பாவோட அம்மா)  தினமும் வேலை நடப்பதை பார்த்து சந்தோஷ பட்டார்கள் . ரொம்ப பெருமை பட்டார்கள்  அதற்க்கான காரணம் ஒன்று ரொம்ப நாள் கழித்து,அதுவும் என் பேரன் தலையடுத்து வீடு கட்டுகிறான் என்ற பெருமை .இன்னொன்று அவங்க பழைய வீடு இருந்த மனை அது .சில நேரங்களில் புது வீடு வாசலில் சென்று  அமர்வது, படுத்து வந்தாங்க .எனக்கு ரொம்ப சந்தூஷமா இருந்தது .நான் தீவாளிக்கு சென்ற போது அவர்களை போட்டோ எடுத்து வைத்திருந்தேன் . நவம்பர் மாதம் வரை வேலை நடந்தது . முன் டிசைன் ,மற்றும் உள்ள கப்போர்ட் வேலை நடந்து கொண்டிருந்தது .

அப்பொழுதுதான் அந்த சோகம் நடந்தது. என் பாட்டி எழுந்து தான் அருகாமையில் இருந்த ஊன்றுகோலை எடுக்கும் போது நிதானம் தவறி கீழ விழுந்தார்கள. இடுப்புக்கு கீழ் எலும்பு உடைந்தது . சித்த வைத்தியர் மற்றும் மற்ற மருத்துவர் இடம் சென்று சரி செய்ய பார்த்தோம் ஆனால் வயதானவர்களுக்கு கட்டு போடா முடியாது என்று விட்டார்கள். படுத்த படுக்கையில் இருந்தபடியே நாளுக்கு நாள் உடல் மெலிந்து குழைந்தை போல் குறுகி போனார்கள். அவர் படுக்கையில் இருக்கும் போதும் வேலை நடக்குதா என்று கேட்பாங்க.

கனவு  களைந்தது :

ஜனவரி 07, 2014 அவருடைய உயிர் பிரிந்தது.அவர் உயிர் பிரியும் முதல் நாள்  வரை என் வீட்டு வேலை நடைபெற்றது. அன்று என் கணுவும் கலைந்தது. அவங்க பேர்ல வீடு கட்டி எல்லா உறவினர்களையும்,நண்பர்களையும்  அழைத்து ,
என் பாட்டியை ரிப்பன் வெட்டி புது வீட்டை திறந்து வைத்து,அந்த சமயம் பலூன் வெடிக்க அவங்க கையாள வீட்டு சாவியை எங்க அம்மாவிடம் கொடுக்க வேண்டும் ,குடும்பமே சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று பல கனவுகள் இருந்தது அத்தனையும் அன்றோடு கலைந்தது. ஆனால் வீட்டு சாவியை என் பாட்டி என் அம்மாவிடம் உயிரோடு உள்ளபோதே கொடுத்துவிட்டார், அவர் இறந்த பிறகு, வீடு கட்டும் ஒரு சந்தோசம் ,ஆர்வம் எல்லாம் குறைந்தது.

அப்புறம் அக்கா பசங்க காதுகுத்து ,மாமா வீடு குடி போனது, அது, இதுன்னு  அடுத்து அடுத்து நல்ல ரன் ரேட் ல செலவு வந்தது .வீடு அப்பிடியே ஒரு வேலையும் நடக்காம இருந்தது. டிசம்பர் மாதம் மறுபடியும் வீட்டின் வேலை ஆரம்பித்தது .பாட்டி தெவஷம் முடிந்தது . இன்னும் சில வேலைகள் pending இருக்கவே நான் மார்ச் மாதம் எப்படியும் குடி போய்விடலாம் என்று இருந்தேன்.

ஜனவரி 24 ம் தேதி அம்மா கால் பண்ணி அடுத்த வாரம் பிப்ரவரி 1 ஆம் தேதி குடி போக வேண்டும் . நல்ல நாள் இல்ல அடுத்த வருடம் மாமங்க வருடம்,இன்னும் 7 மாதத்துக்கு ஒன்னும் தேதி இல்லை, என்று சொல்ல, என்னமா திடிர்னு சொல்றீங்களேனு கொஞ்சம் நேரம் கொடுங்க நான் எப்புடியாவது கீழ தரை போட்டுவிட்டு போகலாம்னு சொல்லி சமாளித்திவிட்டேன் .அப்பாவும்  சொல்ல அம்மா அரை மனதோடு ஒப்புகொண்டாங்க.

ஆனால் ஜனவரி 31 ஆம் தேதி 9 மணிக்கு கால் பண்ணி 1 ஆம் தேதி அதிகாலை 12: 30 to 1:30 வீடு குடி போகிறோம் உடனே கிளம்பி வா என்று சொல்ல . என்ன மா னு கேட்டா , பாட்டி தெவஷம் முடிஞ்சிரிச்சி ,வீட்ட சும்மா போடா கூடாது ,
நான் உன்கிட்டே suggestion கேட்க கால் பன்னல, வீடு குடி போகிறோம் சேதி தான் சொல்றன்ணு  சொன்னங்க .நான் அலண்டு போய் எங்க scene போட்டா நம்ல இல்லாமலே இவங்க குடிப்புகுந்துருவாங்கலோனு மேனேஜர் கிட்ட லீவ் சொல்லிட்டு கெளம்பி போன்னேன் .

வெறும் அய்யர் வைத்து ,ஊர்ல மற்றும் பொறந்த பொண்ணுவோ க்கு மட்டும் சொல்லி ,ரொம்ப சிம்ப்ளா  வீடு குடிபுகுந்தோம்.
வீடு ஆரம்பித்தது முதல் குடி புகுந்தது வரை எல்லாமே த்ரில்லிங் ஆக அமைந்தது. அன்று என்னக்கு என்னவோ தெரியல ஒரு மன நிறைவு. இந்த ஒரு கனவுக்காக நான்  நெறைய நாள் , தூங்காம ,சரியாய் சாப்டாம(initial days in my career ), சில சமயங்களில் friends உடன் டைம் ஸ்பென்ட் பண்ண முடியாம,சில நேரங்களில் கோவப்பட்டு சிலரிடம் பேசாம போனதுண்டு. அதுக்கான பலன் கிடைத்தது போல ஒரு உணர்வு. நம்மளும் அந்த ஊர்ல பொறந்தோம் ன்றதுக்கு ஒரு சின்ன  அடையாளம்  உருவாக்கியது போல ஒரு உணர்வு. என் பாட்டி எங்களோடு இல்லை என்றாலும் அவர்கள் ஆசியூம் ,சொல்லிக்குடுத்த நற்பண்புகள் எங்களோடு இருக்கும்.

சிலர் சொல்லுவாங்க வீடு அமைவதும் பொண்ணு அமைவதும் ஒரு குடுப்பன வேணும்னு  வீடு  உண்மை தாங்க ஆனா பொண்ணு  தெரியலங்க .  எல்லா கட்டங்களிலும் நாங்க ஒன்னு நெனைச்சி செய்வோம் ஆனா அதுவா ஒரு மாதிரி நடக்கும் .ஆனா நல்லதாகவே நடக்கும்.எல்லாமே surprise தான் . இது போல என் கல்யாணமும் கல்யாணத்துக்கு முதல் நாள் எங்க அம்மா போன் பண்ணி கூபிட்டாங்கன்னா சூப்பரா இருக்கும்( செலவு மிச்சம்  ஆகும் :))
இந்த ஒரு என் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வை  உங்களோடு பகிர்ந்து கொண்டதில் எனக்கு மிகவும்சந்தோசம் .என் முதல் கனவு வீடு நிறைவேறியது. அடுத்த கனவை (விவசாயம்) நோக்கி ...

உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி படித்தமைக்கு நன்றி .