அன்புள்ள தோசை
என்னடா இவன் தோசைக்கு எல்லாம் டைட்டில் குடுத்து எதோ எழுதுறான்னு யோசிக்கீறீங்களா ?
அட ஆமாங்க வீட்டுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு . தினமும் தயிர் சாதம் , புளி சதாம்னு variety சாதம் ,சாதம் ன்னு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு .ஹோட்டல் ல சாப்பிட்டால் வாங்கின சம்பலத்த account transfer பண்ண வேண்டியதுதான் அதுவும் தண்ணியில சக்கரைய கலக்கி இதுதான் சாம்பார்னு நம்மகிட்டயே பேரு வச்சி வெறுப்பு ஏத்துவானுங்க . ஆபீஸ் ல தோச சாப்டலாம்னா tissue பேப்பர் போல மடிச்சி தான் கொடுக்குறாங்க . ஒன்னும் கட்டுபடி ஆகல .என்னோட ரூம் மேட் வாடநாடு , அதுவும் வெளியில தோசை மாவு வாங்கி சாப்பிட்டா மாவுல எதாவது கலப்படம் பண்ணுவாங்கன்னு தோசையே சுட மாட்டானுங்க.
நல்ல வேலையா அவனுங்க ஊருக்கு போய்ட்டானுங்க . இது தான் சரியானா சமயம் , எப்படியாவது இன்னைக்கு நம்ம தோச சுட்டு சாப்பிடனும்னு முடிவி பண்ணி கடைக்கு போய் அரை கிலோ மாவு வாங்கி விட்டு வந்தேன் . என்னமோ இன்னைக்கு தோச சாப்டலநா உலகம் அழிந்துவிடுவது போல ஒரு பீலிங் .
ஒருவழியாக மாவு வாங்கி வந்து விட்டு சைடு டிஷு- தக்காளி,காரட்,பீன்ஸ் ,வெங்காயம்,பூண்டு ,கருவேப்பிலை எல்லாம போட்டு நல்லா காய்கறி போட்ட தக்காளி தொக்கு வைத்து விட்டேன் .
ரூம் மேட் என்னை ஊத்தாம ரொட்டி சுட்டு ரொட்டி சுட்டு தோசை கல்ல கண்ணன்கரறேன்னு தீய்ச்சி வைச்சிட்டு போய்ட்டானுங்க.
கடுப்பு மேல தோசைக்கல்ல கழுவிவிட்டு வாங்கின மாவ உப்பு போட்டு கலக்கி விட்டு அடுப்ப பத்தவச்சு நல்லா என்னை தடவி மாவை தோசைகல்லில் ஊற்றினேன் .மனசுல நல்லா நம்ம வடிவேலு ஒரு படத்துல ஹோட்டல்ல நல்லா வருனிச்சி தோசை ஆர்டர் பண்ணுவாரே அதுபோல ஒரு எதிர்பார்ப்பு .
ஆனா முதல் தோசை .............
மாசம் மாசம் வாடக 5 தேதிக்கு மேல வாடகை தர்ராம போன எங்க ஹவுஸ் ஓனருடைய மூஞ்சி வாய் ஒரு பக்கம் முழி ஒரு பக்கம் ,மண்டைல இருக்குற முடி ஒரு பக்கம் பிச்சிகிட்டு போகும் அது போல என்னுடைய முதல் தோசை
சும்மா பிச்சிக்கிட்டு போச்சு .
எரிச்சலுடன் பிஞ்சி போன ஒரு தோசை துண்டை எடுத்து வாய்ல வைச்சா "கொய்யால ஊத்த புளிப்பு " மாவு தயாரிச்ச கடைகாரன் கைல கெடைச்சான் அவன் மூஞ்சி மேல துப்பி இருப்பன் .
சரி எப்பவும் மொத தோசை அப்படி தான் வரும் , ரெண்டாவது தோசை அழகா வரும்னு பத்தா platform ல பிச்சை எடுக்குற கெழவி மூஞ்சி மாதிரி சுருக்கம் சுருக்கமா வந்துடிச்சி .அப்பிடியே சுருட்டி தட்டுல போட்டுடேன் .
இந்த தடவை தன்னம்பிக்கையுடன் எப்பிடியும் இந்த தோசை அழகா சூப்பரா வரும்னு மூணாவது தோசைய ஊற்றினேன் . நல்லா என்னைய தோசை ஓரங்களில் ஊற்றி விட்டு ஆவலுடன் வைத்து விட்டு பார்த்து கொண்டு இருந்தேன் . ஒரு பாதி வெந்தவுடன் திறுப்பி போடும் தருவாயில் .......
யாரோ என் மொபைலுக்கு கால் செய்தார்கள். ரூமுக்கு போய் பேச ஆரம்பிச்சி நலன் விசாரிச்சி 5 நிமிடம் ஆன பிறகு ,
என்ன மாப்ள பண்ற..
நானா டா தோச சுட்டுகிட்டு இருக்கான் .
என்ன மாப்ள comeputerla keyboarda தட்டிகிட்டு இருப்பனு பார்த்த தோச சுட்டுகிட்டு இருக்க .
டேய் நானே தோச நல்லா வரலன்னு கடுப்புல இருக்கன் நீ என்னன்னா timing ல rhyming ah பேசுறன்னு சொல்லும்போது ஒரு அருமையான ஸ்மெல் .
அப்போ தான் ஞாபகம் வந்துது . அடுப்புல தோசை இருக்குறது .
அப்படியே போன கட் பண்ணிவிட்டு ஓடி போய் தோசை கல்ல பார்த்தா தோசை அம்மாவசை கலர்ல கருகிடிச்சி .தோசைகல்லுக்கும் தோசைக்கும் இடைல ஒரு ஆள் பூந்து வரலாம் போல அந்த அளவுக்கு தோசை மேலோகம் போய்டிச்சி ...
அப்ப தான் எங்க அம்மாவை நெனைச்சன் . இத்தனை வருஷம் எத்தனை நாள் schoolukku போகும்போது , பல வேல இருக்கும் போதும் , நமக்காக அழகா வட்டமா, அருமையா தோசை சுட்டு போட்டுருபாங்க . ஆனா அந்த தோசைக்கும் நம்ம பெரிய அப்பாடக்கரு மாதிரி இதுல உப்பு இல்ல,புளிப்பா இருக்கு ,இந்த தோசைக்கு எப்ப பாரு ஒரே சட்னி , உனக்கு வேற variety தோசையே சுட தெரியாத ன்னு கடுப்பு ஏத்துவோம் .
ஒரு நாளைக்கு தோசை சுடவே நமக்கு இவ்ளோ கடப்பாகுதே . இவங்க இவ்ளோ நாள் நமக்காக எவ்ளவு பொறுமையா நமக்காக தோசை செய்ஞ்சி போட்றுபாங்க .
அவங்க கிரேட் அப்படினுனு அம்மாவை நெனைசிகிட்டே நாலாவது தோசை சுட ஆரம்பிச்சேன் .முதல் தோசைக்கு இருந்த அதே தீ , அதே கல்லு, அதே அளவு மாவு ,அதே அளவு எண்ணெய் . என்ன ஒரு ஆச்சரியம் தோசை அழகா எங்க அம்மா முகம் மாதிரி சிரிச்சிகிட்டே வந்துது .
ரொம்ப சந்தோசத்துடன் அஞ்சாவது தோசை
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
என்ன பாக்குறீங்க அரை கிலோ மாவுக்கு என்ன 50 தோசையா வரும், மாவு தீந்துச்சிங்க,போய் வேற வேல இருந்தா பாருங்க.
Dedicated to bachelors who stay away from there parents while eating.