சில்லரை பொழப்பு மச்சி
சில்லரை பொழப்பு மச்சி
நான் எப்பொழுதும் மாதம் சம்பளம் போட்டவுடன் வீட்டிற்க்கு சென்று எல்லோரையும் பார்ப்பது வழக்கம் . மாறாக இந்த முறை சம்பலதேதி 15 நாள் இருக்கவே நான் வீட்டிற்க்கு செல்ல வேண்டியிருந்தது . வீட்டிற்க்கு சென்று விட்டேன் .
எப்பொழுதும் நான் வீட்டிலிருந்து பெங்களுரு செல்ல புறப்புடும் போது என் அம்மா கொஞ்சம் சில்லறை அல்லது பயணத்திற்கு தேவையான அளவு பணம் தருவது வழக்கம். இந்த முறை வீட்டில் பணம் இல்லை. என்னிடம் இருந்த பணத்தை வீட்டில் செலவழித்து விட்டேன் . இருப்பது 500 ருபாய் மட்டும் தான் அதுவும் ஒரு 500 ருபாய் நோட்டு.இந்த தொகையை கொண்டு நான் பெங்களூரு செல்ல வேண்டும் மேலும் மீதம் உள்ள 15 நாட்கள் கடத்த வேண்டும்.
என் கிராமத்திலிருந்து விருதாச்சலம் செல்ல நான்கு ருபாய் தேவை . ஐநூறு ருபாய் நோட்டை அந்த பேருந்தில் காட்டினால் நடத்துனர் , நான்கு ருபாய் டிக்கெட்க்கு நான்காயிரம் பேச்சு பேசுவார் என்று எனக்கு ஒரே படபடப்பு . நல்ல வேலை ஒரு ஐந்து ருபாய் என் அம்மா தேடி கண்டுபிடித்து கொடுத்தது என்னை இந்த நடத்துனரிடம் இருந்து காப்பாற்றியது . அப்படா என்று பெரு மூச்சு விட்டு கொண்டு ஐந்து ருபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினேன் .தமிழ் நாடு அரசு பேருந்து நடத்துனர் சில்லறைகளை சரியாக திருப்பி கொடுத்து விடுவார்கள் மேலும் குறைந்த தூரம் செல்லும் இடமாக இருந்தாலும் டிக்கெட் மறக்காம கொடுத்து விடுவார்கள். இந்த இரண்டிலும் கர்நாடக பேருந்துகளில் (BMTC ) கொஞ்சம் கடினம். மீதி சில்லறை ஒரு ருபாய் நடத்துனர் கொடுத்தார் . அதனை பொற்காசுகள் போல என் wallet ல சேகரித்தேன்.கோடையில மழையோட அருமை தெரியும் என்பது போல வறுமையில் தான் சில்லறைகள் அருமை தெரியும். அதிலும் சில்லறைகளின் அருமை தமிழ் நாடு அரசு பேருந்துகளில் புரியும்.
ஒரு வழியாக 8.45 பெங்களுரு செல்லும் பேருந்தில் நான் முன்பதிவு செய்த இருக்கையில் அமர்ந்தேன் . பெங்களுரு செல்ல டிக்கெட் விலை 195 ருபாய் என்பதால் எப்படியும் நடத்துனர் கோபித்து கொள்ளாமல் சில்லரையை கொடுத்துவிடுவார் என்று ஜாலியாக இருந்தேன்.
பேருந்து புறப்பட தொடங்கியதும் கண்டக்டர் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.
முதல் இருக்கையில் இருந்தவர் 500 ரூபாய் நீட்டி பெங்களூரு என்றார்.
நடத்துனர் 500 ரூபாய் கண்டதும் எல்லாரும் சில்லறையை எடுத்து கொள்ளுங்கள் என்று மறைமுகமாக சொன்னார்.
ம்ம் இன்னைக்கு முதல் போனியே சில்லறை இல்லையா? என்று அலுத்து கொண்டார் நடத்துனர்.
இரண்டாவது நபர் 1000 ருபாய் நோட்டை நீட்டி இரண்டு பெங்களுரு என்றார்.
நடத்துனர் கடுப்பாகி விட்டார். ஏன்யா வரும் போதே சில்லறை கொண்டு வரமாட்டீங்களா ? என் உயிரை எடுக்க வறீங்க என்றார்.
அவர் ரொம்ப அசால்டா என்ன சார் 1000 ருபாய் க்கு சில்லரை இல்லையா என்றார். யோவ் இது ஒன்னும் பேங்க் இல்ல எல்லாருக்கும் சில்லரை கொடுக்க, நீங்க தான் கொண்டு வரணும் என்றார்.
ஒன்னு சில்லரை கொடு இல்லனா வழியில ஹோட்டல் ல வண்டி நிக்கும்
சில்லரை மாத்திகொண்டு வா என்றார்.
மூன்றாவது ஆள் ஒரு பெரியவர் 200 ருபாய் நீட்டி ஒரு பெங்களூரு என்றார் .
ஒரு 5 ருபாய் சில்லறை இருக்குமா என்றார் ? அதற்கு பெரியவர் இல்லை என்றார்.
கொஞ்சம் தேடி பார்த்துவிட்டு சொல்லு பெருசு என்றார் .
அவர் சட்டை பையை தடவி விட்டு சில்லறை இல்லை என்றார் .
ஏற்கனவே கடுப்பில் இருந்தே நடத்துனர், யோவ் நீங்க எல்லாம் எதுக்கு யா சில்லரை இல்லாம பஸ்ல ஏறுறீங்க ?
அந்த பெரியவர், நீ எதுக்கு சில்லறை இல்லாம இந்த பஸ்ல வர்ற.. நான் என்ன 500 ருபாய்க்கா சில்லரை கேட்டேன் 5 ரூபாய்க்கும் சில்லரை இல்லை என்றால் நீயெலாம் என்னையா கண்டக்டரு ....உனக்கு பொழப்பு சில்லர கொடுக்குறதுதான்...என்றார்.
நடத்துனர் டென்ஷன் ஆகி என்னையா எடக்கு மடக்கா பேசுற... பஸ்ஸ விட்டு இறங்கு யா என்றார்.
நான் எதுக்கு யா இறங்கனும் இது ஒன்னும் உன் அப்பன் ஊட்டு பஸ்சு இல்ல .
போ போ வேலைய பாத்துட்டு போ என்றார் பெரியவர் .
அதற்குள் பேருந்தில் இருக்கும் சிலஜால்ரா கோஷ்டிகள் சார் கோப படாதீங்க என்று நடத்துனரை சமாதனம் செய்தனர் .
சில நாட்டாமைகள் பெரியவரே விடு யா சில்லர கொடுக்காம கண்டக்க்டறு எங்க போய்டுவாரு ...என்றனர் .
அதற்குள் சில்ல வடிவேலு ரசிகர்கள் ,,,சரி சரி விடுங்கா பா என்றனர்..
இவ்வாறு அமளி குமிளியாக இருக்க ,,,
நடத்துனர் என் இருக்கையை அடைந்தார் ...
நானோ ஒரே ஒரு ஐநூறு ருபாய் வைத்து கொண்டு இந்த ஆளுகிட்ட எப்படி சண்டை போடாம சில்லரை வாங்குவது என்று முழித்துக்கொண்டே
சார் ஒரு பெங்களுரு என்றேன் 500 ருபாய் தாளை நீட்டியபடி...
நடத்துனர் மேலும் கீழும் பார்த்துவிட்டு ச்ச
அந்த ஆள் சொன்ன சொன்ன மாதிரி சில்லர பொழப்பா ஆகிடிச்சி நம்ம பொழப்பு என்று முனுமுனுத்து கொண்டு ...டிக்கட்டை இயந்திரத்தை கடுப்புடன் அமுக்கினார்.
சார் விடுங்க சார் உங்களுக்காவது சில்லரை கொடுக்குறதுதான் பொழப்பு அனால் எனக்கு நீங்க கொடுக்குற சில்லறையில தான் என் பொழப்பே இருக்கு. (சம்பலதேதிக்கு இன்னும் பதினஞ்சு நாள் இருக்கு சார்) என்றேன்.
அவருக்கு புரிந்தது ,பிறகு அவர் கோபம் தணிந்தது , சற்று புன்முறுவலோடு என்னை பார்த்தார் . நானும் புன்னகைத்தேன் .
பிறகு என்ன, டிக்கெட்டு பின்னால மீதி 305 அண்ட் எழுதி கொடுத்துட்டார்...
எனக்கு ஒரு பக்கம் அவர் கோபம் தனிந்ததில் சந்தோஷம் . அதே வேளையில்
மீதி சில்லரை கொடுக்காமல், எழுதி கொடுத்து விட்டாரே. இனி திரும்ப சில்லரையை வாங்கும் வரை நிம்மதியா தூங்க முடியாதே என்று எண்ணிக்கொண்டே இருந்தேன்.
நல்ல வேலை அவரே வந்து என் மீதி நாட்கள் பொழப்பை எண்ணி சில்லறையை கொடுத்துவிட்டார் .
Subscribe to:
Posts (Atom)