அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா
அப்பனும் இல்லை ஆத்தாளும் இல்லை
ஆனாலும் நான் ஆனதை இல்லை
முத்து போல முன்னூறு பிள்ளை
அம்புட்டும் குணத்தில முல்லை
என் மூச்சில் அவர்கள் இருக்க
அவர்கள் மூச்சில் நான் இருக்க
என் நிழலில் அவர்கள் இருக்க
அவர்கள் நினைவில் நான் இருக்க
விடியும் வரை காத்திருப்பேன்
விடிந்த பின் பூத்திருபேன்
நான் காதலனும் இல்லை
அவர்கள் காதலியும் இல்லை
தென்றலாய் நான் இருப்பேன்
அவர்கள் தூங்கும் பொழுது
நிழலாய் நான் இருப்பேன்
அவர்கள் இலைப்புஆருவதர்க்கு
பல பிள்ளைகள் தூங்குவதில் கில்லாடி
அதில் ஒரு பிள்ளை தூங்கவைப்பதில் கில்லாடி
என்னில் ஒளிந்து கொள்ளும் ஒரு பிள்ளை
அதனை கண்டு கொள்ளும் மறு பிள்ளை
ஏணி போல் நான் இருப்பேன்
சில சமயம் ஊஞ்சலாய் நான் இருப்பேன்
என்னை எட்டி பிடிக்கும் ஒரு பிள்ளை
எட்டி உதைக்கும் மறு பிள்ளை
எந்நாளும் எனக்கு சந்தோஷமே
இவர்கள் இருந்தாலே எனக்கு ஆனந்தமே
வெயில் அடிச்சும் நான் துவண்டதில்லை
புயல் மழை அடித்தும் நான் கலங்கியதில்லை
எவன் கண்ணு பட்டுடுச்சோ
எமன் கண்ணு பட்டுடுச்சோ
எவனோ அரசியல்வாதியாம், ஆளும்கட்சியாம்
மக்கள் வரணுமாம், மாநாடு போடணுமாம்
இடம் பத்தாதாம் , நான் அவர்களுக்கு இடைஞ்சலாம்
மாநாடுக்கு நாள் பார்த்தாச்சு
என் சாவுக்கு தேதி குறிச்சாச்சு
சனிக்கிழம நான் சாகனுமாம்
அடுத்த ஞாயாருகிழம மாநாடாம்
வெள்ளி அன்று விடை சொன்னேன்
தலை அசைத்து தாலாட்டு பாடினேன்
பாவம் அவர்களுக்கு தெரியாது
திங்கள் அன்று நான் இருக்க மாட்டேன் என்று...
என்னை நட்டதும் அரசியலுக்காக
வெட்டியதும் அரசியலுக்காக
காத்திருப்பேன் மறுசென்மம்(மரம் நடும் விழா ) வரை...
-இப்படிக்கு அரசியல் வாதிகளால் அவதிப்படும் பள்ளிகூட மரச்சங்கம்