அன்புள்ள தோசை 






என்னடா  இவன் தோசைக்கு எல்லாம் டைட்டில் குடுத்து  எதோ எழுதுறான்னு யோசிக்கீறீங்களா ?

அட ஆமாங்க வீட்டுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு . தினமும் தயிர் சாதம் , புளி  சதாம்னு variety சாதம் ,சாதம் ன்னு  சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு .ஹோட்டல் ல சாப்பிட்டால் வாங்கின சம்பலத்த account transfer பண்ண வேண்டியதுதான் அதுவும் தண்ணியில சக்கரைய கலக்கி இதுதான் சாம்பார்னு நம்மகிட்டயே பேரு வச்சி வெறுப்பு ஏத்துவானுங்க . ஆபீஸ் ல தோச சாப்டலாம்னா tissue பேப்பர் போல மடிச்சி தான் கொடுக்குறாங்க . ஒன்னும் கட்டுபடி ஆகல .என்னோட ரூம் மேட் வாடநாடு , அதுவும் வெளியில தோசை மாவு வாங்கி  சாப்பிட்டா மாவுல எதாவது கலப்படம் பண்ணுவாங்கன்னு  தோசையே சுட மாட்டானுங்க. 

நல்ல வேலையா அவனுங்க ஊருக்கு போய்ட்டானுங்க . இது தான் சரியானா சமயம் , எப்படியாவது இன்னைக்கு நம்ம தோச சுட்டு சாப்பிடனும்னு முடிவி பண்ணி கடைக்கு போய்  அரை கிலோ மாவு வாங்கி விட்டு வந்தேன் . என்னமோ இன்னைக்கு தோச சாப்டலநா  உலகம் அழிந்துவிடுவது போல ஒரு பீலிங் .

ஒருவழியாக மாவு வாங்கி வந்து விட்டு சைடு டிஷு- தக்காளி,காரட்,பீன்ஸ் ,வெங்காயம்,பூண்டு ,கருவேப்பிலை  எல்லாம போட்டு நல்லா காய்கறி போட்ட தக்காளி தொக்கு வைத்து விட்டேன் .

ரூம் மேட் என்னை ஊத்தாம ரொட்டி சுட்டு ரொட்டி சுட்டு தோசை கல்ல கண்ணன்கரறேன்னு தீய்ச்சி வைச்சிட்டு போய்ட்டானுங்க.

கடுப்பு மேல தோசைக்கல்ல கழுவிவிட்டு வாங்கின மாவ உப்பு போட்டு கலக்கி விட்டு அடுப்ப பத்தவச்சு நல்லா என்னை தடவி மாவை தோசைகல்லில் ஊற்றினேன் .மனசுல நல்லா நம்ம வடிவேலு ஒரு படத்துல ஹோட்டல்ல நல்லா  வருனிச்சி தோசை ஆர்டர் பண்ணுவாரே அதுபோல ஒரு எதிர்பார்ப்பு . 

ஆனா முதல் தோசை .............

மாசம் மாசம் வாடக 5 தேதிக்கு  மேல வாடகை  தர்ராம போன எங்க ஹவுஸ் ஓனருடைய மூஞ்சி வாய்  ஒரு பக்கம்  முழி ஒரு பக்கம் ,மண்டைல இருக்குற முடி ஒரு பக்கம் பிச்சிகிட்டு  போகும்  அது போல என்னுடைய  முதல் தோசை 
சும்மா பிச்சிக்கிட்டு போச்சு .

எரிச்சலுடன் பிஞ்சி போன ஒரு தோசை துண்டை  எடுத்து வாய்ல வைச்சா "கொய்யால  ஊத்த புளிப்பு " மாவு தயாரிச்ச கடைகாரன் கைல கெடைச்சான் அவன் மூஞ்சி மேல துப்பி இருப்பன் .

சரி எப்பவும் மொத தோசை அப்படி தான் வரும் , ரெண்டாவது தோசை அழகா வரும்னு பத்தா platform ல பிச்சை  எடுக்குற கெழவி மூஞ்சி மாதிரி சுருக்கம் சுருக்கமா வந்துடிச்சி .அப்பிடியே சுருட்டி தட்டுல போட்டுடேன் .

இந்த  தடவை தன்னம்பிக்கையுடன்  எப்பிடியும் இந்த தோசை அழகா  சூப்பரா வரும்னு மூணாவது தோசைய ஊற்றினேன் . நல்லா  என்னைய தோசை  ஓரங்களில் ஊற்றி விட்டு  ஆவலுடன் வைத்து விட்டு பார்த்து கொண்டு  இருந்தேன் . ஒரு பாதி வெந்தவுடன் திறுப்பி போடும்  தருவாயில் .......

யாரோ என் மொபைலுக்கு கால் செய்தார்கள். ரூமுக்கு  போய் பேச ஆரம்பிச்சி  நலன் விசாரிச்சி  5 நிமிடம் ஆன பிறகு ,

 என்ன மாப்ள பண்ற.. 

நானா டா தோச சுட்டுகிட்டு  இருக்கான் .

என்ன மாப்ள comeputerla keyboarda  தட்டிகிட்டு  இருப்பனு பார்த்த தோச சுட்டுகிட்டு இருக்க . 

டேய் நானே தோச நல்லா வரலன்னு கடுப்புல இருக்கன் நீ என்னன்னா timing ல rhyming ah பேசுறன்னு  சொல்லும்போது ஒரு அருமையான ஸ்மெல் .

அப்போ தான் ஞாபகம் வந்துது . அடுப்புல தோசை இருக்குறது .

அப்படியே போன கட் பண்ணிவிட்டு ஓடி போய்  தோசை கல்ல பார்த்தா தோசை அம்மாவசை கலர்ல கருகிடிச்சி .தோசைகல்லுக்கும் தோசைக்கும் இடைல ஒரு ஆள் பூந்து வரலாம் போல அந்த அளவுக்கு தோசை மேலோகம் போய்டிச்சி ...

அப்ப தான் எங்க அம்மாவை நெனைச்சன் . இத்தனை  வருஷம் எத்தனை நாள் schoolukku  போகும்போது , பல வேல இருக்கும் போதும் , நமக்காக அழகா வட்டமா, அருமையா தோசை சுட்டு போட்டுருபாங்க . ஆனா அந்த தோசைக்கும் நம்ம பெரிய அப்பாடக்கரு மாதிரி இதுல உப்பு இல்ல,புளிப்பா இருக்கு ,இந்த தோசைக்கு எப்ப பாரு ஒரே சட்னி , உனக்கு வேற variety தோசையே சுட தெரியாத ன்னு கடுப்பு ஏத்துவோம் .

ஒரு நாளைக்கு தோசை  சுடவே நமக்கு இவ்ளோ கடப்பாகுதே . இவங்க இவ்ளோ நாள் நமக்காக எவ்ளவு பொறுமையா நமக்காக தோசை செய்ஞ்சி போட்றுபாங்க . 

அவங்க கிரேட் அப்படினுனு அம்மாவை நெனைசிகிட்டே நாலாவது தோசை சுட ஆரம்பிச்சேன் .முதல் தோசைக்கு இருந்த அதே தீ , அதே கல்லு, அதே அளவு மாவு ,அதே அளவு எண்ணெய் .  என்ன ஒரு ஆச்சரியம் தோசை  அழகா எங்க அம்மா முகம்  மாதிரி சிரிச்சிகிட்டே வந்துது .

ரொம்ப சந்தோசத்துடன் அஞ்சாவது தோசை 

.

.

.

.

.

.

.

.

.


.


.


.


.


.


.


.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

என்ன பாக்குறீங்க அரை கிலோ மாவுக்கு என்ன 50 தோசையா வரும், மாவு தீந்துச்சிங்க,போய்  வேற வேல இருந்தா பாருங்க.

Dedicated to bachelors who stay away from there parents while eating.



















சில்லரை பொழப்பு மச்சி


சில்லரை பொழப்பு மச்சி




நான் எப்பொழுதும் மாதம் சம்பளம் போட்டவுடன் வீட்டிற்க்கு சென்று எல்லோரையும் பார்ப்பது வழக்கம் . மாறாக இந்த முறை சம்பலதேதி 15 நாள்  இருக்கவே நான் வீட்டிற்க்கு செல்ல வேண்டியிருந்தது . வீட்டிற்க்கு சென்று விட்டேன் .

எப்பொழுதும் நான் வீட்டிலிருந்து பெங்களுரு செல்ல புறப்புடும் போது என் அம்மா கொஞ்சம் சில்லறை அல்லது பயணத்திற்கு தேவையான அளவு பணம் தருவது வழக்கம். இந்த முறை வீட்டில் பணம் இல்லை. என்னிடம் இருந்த பணத்தை வீட்டில் செலவழித்து  விட்டேன் . இருப்பது 500 ருபாய் மட்டும் தான் அதுவும் ஒரு 500 ருபாய் நோட்டு.இந்த தொகையை கொண்டு நான் பெங்களூரு செல்ல வேண்டும் மேலும் மீதம் உள்ள 15 நாட்கள் கடத்த வேண்டும்.

 என் கிராமத்திலிருந்து விருதாச்சலம் செல்ல நான்கு  ருபாய் தேவை  . ஐநூறு ருபாய் நோட்டை  அந்த பேருந்தில் காட்டினால் நடத்துனர் , நான்கு ருபாய் டிக்கெட்க்கு நான்காயிரம் பேச்சு பேசுவார்  என்று எனக்கு ஒரே படபடப்பு . நல்ல வேலை ஒரு ஐந்து ருபாய் என் அம்மா தேடி கண்டுபிடித்து  கொடுத்தது என்னை இந்த நடத்துனரிடம் இருந்து காப்பாற்றியது . அப்படா  என்று பெரு மூச்சு விட்டு கொண்டு ஐந்து ருபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினேன் .தமிழ் நாடு அரசு பேருந்து நடத்துனர் சில்லறைகளை சரியாக திருப்பி கொடுத்து விடுவார்கள் மேலும் குறைந்த தூரம் செல்லும் இடமாக இருந்தாலும் டிக்கெட் மறக்காம கொடுத்து விடுவார்கள். இந்த இரண்டிலும் கர்நாடக பேருந்துகளில் (BMTC ) கொஞ்சம் கடினம். மீதி  சில்லறை ஒரு  ருபாய் நடத்துனர் கொடுத்தார் . அதனை பொற்காசுகள் போல என் wallet ல சேகரித்தேன்.கோடையில மழையோட அருமை தெரியும் என்பது போல வறுமையில் தான் சில்லறைகள் அருமை தெரியும்.  அதிலும் சில்லறைகளின் அருமை தமிழ் நாடு அரசு பேருந்துகளில் புரியும்.

ஒரு வழியாக 8.45 பெங்களுரு செல்லும் பேருந்தில் நான் முன்பதிவு செய்த இருக்கையில் அமர்ந்தேன் . பெங்களுரு செல்ல டிக்கெட்  விலை 195 ருபாய் என்பதால் எப்படியும் நடத்துனர் கோபித்து கொள்ளாமல் சில்லரையை   கொடுத்துவிடுவார் என்று ஜாலியாக இருந்தேன்.
பேருந்து புறப்பட தொடங்கியதும் கண்டக்டர் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார். 

முதல் இருக்கையில் இருந்தவர் 500 ரூபாய் நீட்டி  பெங்களூரு என்றார்.
நடத்துனர் 500 ரூபாய் கண்டதும் எல்லாரும் சில்லறையை எடுத்து கொள்ளுங்கள்  என்று மறைமுகமாக சொன்னார்.

ம்ம் இன்னைக்கு முதல் போனியே சில்லறை இல்லையா? என்று அலுத்து கொண்டார் நடத்துனர்.

இரண்டாவது நபர் 1000 ருபாய் நோட்டை நீட்டி இரண்டு பெங்களுரு என்றார்.
நடத்துனர் கடுப்பாகி விட்டார். ஏன்யா வரும் போதே சில்லறை கொண்டு வரமாட்டீங்களா ? என் உயிரை எடுக்க வறீங்க என்றார்.

அவர் ரொம்ப அசால்டா என்ன சார் 1000 ருபாய் க்கு  சில்லரை இல்லையா என்றார். யோவ் இது ஒன்னும் பேங்க் இல்ல எல்லாருக்கும் சில்லரை  கொடுக்க, நீங்க தான் கொண்டு வரணும் என்றார். 

ஒன்னு சில்லரை கொடு  இல்லனா வழியில ஹோட்டல்  ல வண்டி நிக்கும் 
சில்லரை மாத்திகொண்டு வா என்றார்.

மூன்றாவது ஆள் ஒரு பெரியவர் 200 ருபாய் நீட்டி ஒரு பெங்களூரு என்றார் .
ஒரு 5 ருபாய்  சில்லறை இருக்குமா என்றார் ? அதற்கு  பெரியவர் இல்லை என்றார்.

கொஞ்சம் தேடி பார்த்துவிட்டு சொல்லு பெருசு என்றார் .
அவர் சட்டை பையை தடவி விட்டு சில்லறை இல்லை என்றார் . 

ஏற்கனவே கடுப்பில் இருந்தே நடத்துனர், யோவ் நீங்க எல்லாம் எதுக்கு யா சில்லரை இல்லாம பஸ்ல ஏறுறீங்க ? 

அந்த பெரியவர், நீ எதுக்கு சில்லறை இல்லாம இந்த பஸ்ல வர்ற.. நான் என்ன 500 ருபாய்க்கா சில்லரை  கேட்டேன் 5 ரூபாய்க்கும் சில்லரை இல்லை என்றால் நீயெலாம் என்னையா கண்டக்டரு ....உனக்கு பொழப்பு சில்லர கொடுக்குறதுதான்...என்றார்.

 நடத்துனர் டென்ஷன் ஆகி என்னையா எடக்கு மடக்கா பேசுற... பஸ்ஸ விட்டு இறங்கு யா என்றார்.

நான் எதுக்கு யா இறங்கனும் இது ஒன்னும் உன் அப்பன் ஊட்டு பஸ்சு இல்ல .
போ போ வேலைய பாத்துட்டு போ என்றார் பெரியவர் .

அதற்குள் பேருந்தில் இருக்கும் சிலஜால்ரா கோஷ்டிகள் சார் கோப படாதீங்க என்று நடத்துனரை சமாதனம் செய்தனர் .

சில நாட்டாமைகள் பெரியவரே விடு யா சில்லர கொடுக்காம கண்டக்க்டறு எங்க போய்டுவாரு ...என்றனர் .

அதற்குள் சில்ல வடிவேலு ரசிகர்கள் ,,,சரி சரி விடுங்கா பா என்றனர்..

இவ்வாறு அமளி குமிளியாக இருக்க ,,,

நடத்துனர் என் இருக்கையை  அடைந்தார் ... 

நானோ ஒரே ஒரு ஐநூறு ருபாய் வைத்து கொண்டு இந்த ஆளுகிட்ட எப்படி சண்டை போடாம சில்லரை வாங்குவது என்று முழித்துக்கொண்டே 

சார் ஒரு பெங்களுரு என்றேன் 500 ருபாய் தாளை நீட்டியபடி...

நடத்துனர் மேலும் கீழும் பார்த்துவிட்டு ச்ச 

அந்த ஆள் சொன்ன சொன்ன மாதிரி சில்லர பொழப்பா ஆகிடிச்சி  நம்ம பொழப்பு என்று முனுமுனுத்து கொண்டு ...டிக்கட்டை இயந்திரத்தை கடுப்புடன் அமுக்கினார்.

சார் விடுங்க சார் உங்களுக்காவது சில்லரை கொடுக்குறதுதான் பொழப்பு அனால் எனக்கு நீங்க கொடுக்குற சில்லறையில தான்  என் பொழப்பே இருக்கு. (சம்பலதேதிக்கு இன்னும் பதினஞ்சு நாள் இருக்கு சார்) என்றேன்.

அவருக்கு புரிந்தது ,பிறகு அவர் கோபம் தணிந்தது , சற்று புன்முறுவலோடு என்னை பார்த்தார் . நானும் புன்னகைத்தேன் . 

பிறகு என்ன, டிக்கெட்டு பின்னால மீதி 305 அண்ட் எழுதி கொடுத்துட்டார்...

எனக்கு ஒரு பக்கம் அவர் கோபம் தனிந்ததில் சந்தோஷம் . அதே வேளையில்
மீதி சில்லரை கொடுக்காமல், எழுதி கொடுத்து விட்டாரே. இனி திரும்ப சில்லரையை வாங்கும் வரை நிம்மதியா தூங்க முடியாதே என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். 

நல்ல வேலை அவரே வந்து என் மீதி நாட்கள் பொழப்பை எண்ணி சில்லறையை கொடுத்துவிட்டார் .

















அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா


அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா 




அப்பனும் இல்லை ஆத்தாளும் இல்லை 
ஆனாலும் நான் ஆனதை இல்லை 
முத்து போல முன்னூறு பிள்ளை 
அம்புட்டும் குணத்தில முல்லை 

என் மூச்சில் அவர்கள் இருக்க 
அவர்கள் மூச்சில் நான் இருக்க 
என் நிழலில் அவர்கள் இருக்க 
அவர்கள் நினைவில் நான்  இருக்க 

விடியும் வரை காத்திருப்பேன் 
விடிந்த பின் பூத்திருபேன் 
நான் காதலனும் இல்லை 
அவர்கள் காதலியும் இல்லை 

தென்றலாய் நான் இருப்பேன் 
 அவர்கள் தூங்கும் பொழுது 
நிழலாய்  நான் இருப்பேன் 
 அவர்கள் இலைப்புஆருவதர்க்கு 

பல பிள்ளைகள் தூங்குவதில் கில்லாடி 
அதில் ஒரு பிள்ளை தூங்கவைப்பதில் கில்லாடி 
என்னில் ஒளிந்து கொள்ளும் ஒரு பிள்ளை 
அதனை கண்டு கொள்ளும் மறு பிள்ளை 

ஏணி போல் நான் இருப்பேன் 
சில சமயம் ஊஞ்சலாய் நான் இருப்பேன் 
என்னை எட்டி பிடிக்கும் ஒரு பிள்ளை 
எட்டி உதைக்கும் மறு பிள்ளை

எந்நாளும் எனக்கு சந்தோஷமே 
இவர்கள் இருந்தாலே எனக்கு ஆனந்தமே 
வெயில் அடிச்சும் நான் துவண்டதில்லை 
புயல் மழை அடித்தும் நான் கலங்கியதில்லை 

எவன் கண்ணு பட்டுடுச்சோ 
எமன் கண்ணு பட்டுடுச்சோ 
எவனோ அரசியல்வாதியாம், ஆளும்கட்சியாம் 
மக்கள் வரணுமாம், மாநாடு போடணுமாம் 

இடம் பத்தாதாம் , நான் அவர்களுக்கு இடைஞ்சலாம் 
மாநாடுக்கு நாள் பார்த்தாச்சு 
என் சாவுக்கு தேதி குறிச்சாச்சு 
சனிக்கிழம நான் சாகனுமாம் 
அடுத்த ஞாயாருகிழம மாநாடாம்

வெள்ளி அன்று விடை சொன்னேன் 
தலை அசைத்து தாலாட்டு பாடினேன்
பாவம் அவர்களுக்கு தெரியாது 
திங்கள் அன்று நான் இருக்க மாட்டேன் என்று...

என்னை நட்டதும் அரசியலுக்காக 
வெட்டியதும் அரசியலுக்காக
காத்திருப்பேன் மறுசென்மம்(மரம் நடும்  விழா ) வரை...

-இப்படிக்கு அரசியல் வாதிகளால் அவதிப்படும் பள்ளிகூட மரச்சங்கம் 














சின்ன சின்ன ஆசை


சின்ன சின்ன ஆசை 




அவ்வை பாட்டியிடம் தமிழ் கற்க ஆசை 
அனைத்துவைத்த கணம் மெழுகு மணம் நுகர  ஆசை 
அன்னைக்கும் துணைவிக்கும் சண்டை மூட்டிவிட ஆசை 
அண்டார்டிக்கா ஐஸ் எடுத்து  ஆப்பிள்  ஜூஸ் போட்டு குடிக்க ஆசை 

தூங்கும் துணைவியை தூங்காமல் ரசித்திட ஆசை 
தொட்டில் குழந்தையை கில்லி விட ஆசை 
தொட்டசினுங்கியை சினுக்கிவிட்டு  ரசித்திட ஆசை
மழைக்கால மரக்கிளையை அசைத்துவிட ஆசை

பார்பவையெல்லம் கவிதை வடித்திட ஆசை
பட்டத்து  நூளில் காதல் கடிதம் அனுப்ப ஆசை 
பனித்துளியில் ஒளிந்து கொள்ள ஆசை 
பங்காளிகளோடு சமத்துவம் பேச ஆசை 

கல்யாணத்துக்கு முன் கண் பார்த்து காதல் சொல்ல ஆசை 
விளம்பரம் விரும்பாத அரசியல் தலைவர் பார்த்திட ஆசை 
பொன்வண்டை புடித்து தீபெட்டியில் அடைத்து விட ஆசை 
வெள்ளபெருக்கில் சிக்கிய காகித கப்பலை கரைசேர்க்க ஆசை 

வெள்ளைக்காரனிடம் தமிழில் பேசிட ஆசை 
ரகசியத்தை ரகசியமாய் சொல்லிவிட ஆசை 
ஒரு பொய்யாவது மாட்டிகொள்ளாமல் சொல்லிவிட ஆசை 
கடைசி வரை பகுத்தறிவாளனாய் வாழ்ந்திட ஆசை