இந்த படத்தை பார்த்தவுடன் கிறுக்கியது
பசுமையும் பண்பாடும்
பசுமையும் பண்பாடும்
பறந்து விரிந்த உலகினிலே
நற் பண்புகள் வளர்த்த தமிழ் மன்னே
என் சோக கதைய கொஞ்சம் கேளுங்களேன்
நாகரிகம் கற்றுகொடுத்தது என் பாட்டனாம்
இ ன்று நாகரிகம் மறவாதிருந்தால் நான் பாட்டனாம்
நாளை நாகரிகம் என்ன என்று விக்கிபீடியா சொல்லுமாம்
வேட்டி மட்டுமே ஆடையும்
இன்று விழாக்களுக்கு மட்டுமே வேட்டியாம்
நாளை ப்ளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்குமாம்
ஊரெங்கும் உழைக்கும் உழவர் கூட் டாமாம்
இன்று உழவர் ஒருவரை கூட காணுமாம்
நாளை உழவன் எங்கே என்று கூகுள் கண்டுபிடிக்குமாம்
இங்கு எத்திக்கும் கேட்கும் குயில் இசையாம்
இன்று கைபேசியில் மட்டுமே கேட்க்க முடியுதாம்
நாளை இது தான் குயில் இசை என்று டிஸ்கவரி தமிழ் கட்டுமாம்
எழில் கொஞ்சும் விலை நிலமாம்
இன்று நல்ல விலைக்கு போகும் மனை நிலமாம்
நாளை சந்திரனில் மனை வாங்க இணையதளம் சொல்லுமாம்
பாடசாலைகள் படிப்பை தவிர ஒன்றும் கற்று கொடுக்கலையாம்
இன்று பள்ளிகள் பணத்தை தவிர ஒன்றும் பெற்று கொள்ளலையாம்
நாளை பள்ளிகள் என்பதே வேறு ஒரு உலகமாம்
எங்க போய் நான் சொல்ல
என் அருமை வயல் வெளியே
சென்று வருகிறேன் பார்ப்போம் அடுத்த பொங்கலுக்கு
(Skype ல அப்பா அழைக்கிறார் S DAD COMING ......)
Subscribe to:
Posts (Atom)