என் கற்பனை கரைந்துவிடும் என்பதற்காக நான் கண்டவுடன் கிறுக்கியது



இவள்  குட்டித்தாமரை என்பேனோ 
இல்லை தங்கத்தாரகை என்பேனோ 

இவள் பற்கள் முத்துக்கள் என்பேனோ 
இல்லை பளிங்கு கற்கள் என்பேனோ 

இவள் கண்களை காந்தம் என்பேனோ 
இல்லை மின்னல் என்பேனோ 

இவள் மூக்கு குடமிளகா என்பேனோ 
இல்லை புல்லாங்குழல் என்பேனோ 

இவள் இதழ்கள் இளங்குருத்து என்பேனோ 
இல்லை இல்லகியம் என்பேனோ 

இவள் கண்ணங்கள் இளநீர் கண்ணங்கள் என்பேனோ 
இல்லை ஆரஞ்சு வண்ணம் என்பேனோ 

இவள் காதுகள் கஞ்சிரா என்பேனோ 
இல்லை தமிழ் காவியம் என்பேனோ 

நிஜக்காதல் ஈன்றெடுத்த நிலவு என்பேனோ 

இல்லை சுட்டிக்காதல் என்பேனோ  


மொத்தத்தில் இவள் மண்ணில் வந்த வானத்து தேவதை என்பேனோ 
இல்லை நான் வணங்கும் தெய்வம் என்பேனோ 

பல கண்கள் சுட்டு போட்டுருக்கும் என் கண்களையும் சேர்த்து 
எனவே சுற்றி போடுங்கள் என் ஆசை மலருக்கு 

                                                            - அன்பரசன்