சத்தமில்லா முத்தம்
அன்று வெள்ளிகிழமை, மாலை சுமார் 6.35 மணி இருக்கும், வழக்கமாக ஆபீஸ் விட்டு 9.00 மணிக்கு தான் வீட்டுக்கு செல்வான் குரளமுதன்.குரளமுதனுக்கு ஒருவாராம் முன்பு தான் திருமணம் நடந்தது என்பதால் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்னு ஆர்வத்துடன் அவசர அவசரமாக தன் கணினியை அமத்தி விட்டு வீட்டுக்கு செல்வதற்காக தன் வண்டி சாவியை தன்னோட பையில் இருந்து எடுத்தான்,அப்பொழுது தன் மேனேஜர் மன்னார் கூப்பிடுவதை கேட்டான், ஆஹா அரை மண்டையன் வந்துட்டான் இனி நம்ம வீட்டுக்கு போன மாதிரிதான்னு நினைத்துகொண்டே
"ஆங் சொல்லுங்க சார்" என்றான் குரளமுதன்.
"குறள் நீ நம்ம கிளைண்டுக்கு மெயில் அனுப்பனும்னு சொல்லியிருந்தேன் அனுப்பிட்டியா ? " என்றார் மேனேஜர்.
"ஹ்ம்ம் 3.00 மணிக்கே அனுப்பியாச்சு சார்" என்றான் குறள்.
"அப்பறம் அந்த ஜூனியர் மணி கிட்ட ஒரு வேலை குடுத்தியே முடிசிட்டனா? " என்றார் மேனேஜர்.
"ஹ்ம்ம் முடிச்சிட்டான் சார்"
"அப்புறம் " என்று இழத்தார் மேனேஜர்.
இந்த மாங்கா மடையன் நம்ம அவசரம் புரியாம சாகடிக்குரானே என்று நினைத்து கொண்டே
"ஹ்ம்ம் சொல்லுங்க சார் " என்றான் குறள் .
மேனேஜர் குரளமுதனை பார்த்தார், அவன் கவனம் முழுவதும் வீடுக்கு போகணும் என்பதை அவன் கால்கள் ஒரு இடத்தில நிற்காமல் இருப்பதை கண்டு உணர்ந்தார்.
"குறள் ,,புதுசா கல்யாணம் ஆகிருக்கு ,,ம்ம் ...ம்ம் ,உன் காலு ஒறிடத்துல நிக்கல,,ஹ்ம்ம் புல் மஜா தானா ,......ஹ்ம்ம் நடத்து நடத்து,,........அப்படியே முணு வரஷத்துக்கு முன்னால எனக்கு இருந்த துடிப்பு உன் கண்ல தெரியுதுடா!,,,
நீ நல்லா வருவடா ! என்றார் மேனேஜர்.
மானகெட்ட நாய் எந்த டயலாக் எங்க சொல்லுது பார் என்று நினைத்துகொண்டே,ஹி ஹி என்று பகடை சிரிப்பு சிரித்துகொண்டே
" ஏன் சார் இப்ப அந்த துடிப்பு இல்லையா " என்று கேட்டான் குறள் .
"டேய் அந்த ரிப்போர்ட் என்னாச்சு " என்று குறள் வாயை அடைப்பதர்கக்காகவே கேட்டார் மேனேஜர்.
"ஐயோ சாமி ஆல விடுங்க ஓகே பாய் சார் " என்று சொல்லிவிட்டு
எப்படி தன் மனைவி கோகிலாவை குஷி படுத்துவது என்று எண்ணிக்கொண்டே மூடவிருந்த lift ஐ அடைந்தான். தான் செல்லவேண்டிய Ground Floorக்கு பதிலாக தான் இருக்கும் floor பட்டனை அமுகின்னான். அருகில் இருந்த பெண் வியந்தாள் . பின்பு "ஸ்" என்று சொல்லிகொண்டே தலையில் போட்டுகொண்டு Ground floor பட்டனை அமுகிவிட்டு அந்த பெண்ணை பார்த்து மொக்கையாய் சிரித்தான், அதை அந்த பெண்மணி கண்டுக்கவே இல்லை.
பின் தன் வண்டி நிறுத்தத்தை அடைந்தான்.
அங்கே நிறுத்திவைத்திருந்த தன் நீல நிற yamaha fz வண்டியை பார்த்தான். புது வண்டி என்பதால் பல பல வென இருந்தது. சாவியை போட்டுவிட்டு பெட்ரோல் tank ஐ உற்று பார்த்தான்.அங்கே கோகிலாவின் பொன் முகம் மின்னியது. தொட்டு பார்த்தான்.அதிர்ச்சி அடைந்தான் . பின் தன் வண்டி கண்ணாடியை சரிசெய்ய முற்பட்டான். அங்கும் கோகிலாவின் பொன் முகம் மின்னியது.மறுபடியும் தொட்டு பார்த்தான், அங்கும் இங்கும் திரும்பி பார்த்தான் , யாரும் இல்லை என்பதை உணர்ந்தான்.
"அட ச்ச கணவ்வா ? டேய் குரளமுதா உணர்ச்சிய control பண்ணுடா "
என்று சொல்லிவிட்டு தன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
அங்குஇருந்து பத்து நிமிட தொலைவுதான் அவன் வீடு. என்னமோ தெரியவில்லை திருமணத்திற்கு முன் அந்த பத்து நிமிட தொலைவே அவனுக்கு வெகு தூரம் போல இருந்தது ,ஆனால் இன்று அது மிக அருகில் இருந்ததுபோல உணர்ந்தான்.
வழக்காமாக 40 கி .மீ வேகத்துல செல்லும் குரளமுதன் இன்று 50 கி .மீ வேகத்துல சென்றான்.தன் மனதில் இறக்கை கொண்டு பறப்பது போல ஒரு உணர்வு.
தன் வீட்டுத் தெருமுனையை நெருங்கினான்.
அங்கு உள்ள வீடுகள் இருட்டாக இருந்தது. பவர் இல்லை என்பதை உணர்ந்தான் "ஹ்ம்ம் நம்ம ஊர்ல கரண்ட் இல்லனா குடும்பமே வீட்டு வாசல்ல வந்து இருப்பாங்க ,,ஆனா இங்க கரண்ட் இருந்தாலும் இல்லைனாலும் நல்லா கதவ இழுத்து சாத்திக்குறானுங்க" என்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தான்.
வெள்ளிகிழமை என்பதால் சாமி ரூமில் விளக்கு ஏற்றி விட்டு தீபெட்டியை அங்கயே வைத்திருந்தாள் கோகிலா. கரண்ட் நின்றதால் அங்கு உள்ள தீபெட்டியை எடுத்துக்கொண்டு hall லுக்கு சென்றால் அங்கு டிவி அருங்கே இருந்த மெழுகு வத்தியை எடுத்து ஒரு மெழுகு வத்தியை ஏற்றி விட்டு இன்னும் ஒன்றை பெட் ரூம் ல ஏற்றிவிடலாம் என்று நினைத்து அதை எடுத்து கொண்டு பெட் ரூம்க்கு சென்றாள் கோகிலா. பெட் ரூம் கதவு அருகே அவள் கழுத்து உயரம் உள்ள cupboard மேல ஒரு மெழுகு வத்தியை ஏற்றினாள்.
இதற்க்கு இடையில் குரளமுதன் தன் வண்டியை நிறுத்திவிட்டு, தன் செருப்பை கழற்றிவிட்டு,
"கோகிலா! கோகிலா! கோகி ! அடியே என் கோகி ! என் ஆசை பொண்டாட்டி எங்கடி இருக்க " என்று சொல்லிகொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தான்.
"ஹ்ம்ம் ஹால் ல ஆள காணும் , சமையல் அறைல இருப்பாளோ" என்று அங்கு சென்று பார்த்தான்.
"இங்கும் இல்லையே,ஒருவேளை சாமி ரூம்ல இருப்பாளோ என்று எண்ணிக்கொண்டே கோகி! என் அழகு ராட்சஸி ! எங்கடி இருக்க என்று சொல்லிகொண்டே சாமி ரூம் சென்ற பார்த்தான்.
இவன் தேடுவதை அறிந்து அவள் பெட் ரூம் கதவு அருகே ஒளிந்து கொண்டாள் கோகிலா.
"ஹ்ம்ம் இன்னும் பெட் ரூம் தான் பாக்கி அதையும் போய் பார்த்துவிடுவோம் என்று பெட்ரூம் கதவை மெதுவாக தள்ளினான் குறள். கோகிலா சின்ன வயதில் திருடன் போலீஸ் விளையாடும் பொழுது இருந்த உணர்வு போல் தன் கண்களை மூடிக்கொண்டு,பற்களை இறுக இறுக்கி கொண்டு கதவின் அருகே இருந்த சுவற்றில் பள்ளி போல் ஒட்டிகொண்டாள். cupboard மேலே இருந்த மெழுகுவத்தியின் ஒளி கோகிலா முகத்திற்கு நேராக பட்டது. அவள் கண்களை மூடிகொண்டிருந்தாலும் அந்த மெழுகுவற்றியின் ஓளியை அவள் கண்களால் உணர முடிந்தது.குரளமுதன் வருகிறானா? இல்லையா ? ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறுகண்ணால் பார்த்தாள்.
குரளமுதன் மெதுவாக கதவை தள்ளிவிட்டு நேராக பார்த்தான், பின் மெழுகுவர்த்தி இருப்பதை பார்த்தான்,அப்பொழுது கோகிலா ஒருமுறை தன் கண்களை திறந்து பார்த்துவிட்டு பின் மறுபடியும் கண்களை மூடிகொண்டாள்.
குரளமுதன் அவள் இருப்பதை கண்டுவிட்டான்.
அடியே கள்ளி ! நீ இங்கதான் இருக்கியா ! என் அழகு பொண்டாட்டி! என்று மனதில் சொல்லிக்கொண்டு அவள் அருகே சென்றான்.அவள் கண்களை திறந்து பார்த்தாள், அவன் பார்த்துவிட்டதை உணர்ந்த உடனே அவள் அங்கு இருந்து தப்பிக்க முயன்றாள். இதை உணர்ந்த குறள் அவளை அப்படியே தன் கைகளால் அவள் இடுப்பை பிடித்து தாங்கி அவள் நின்ற சுவரை ஒட்டி நிறுத்தினான்.பின் அவள் இரு கைகளையும் தன் கைகளால் பற்றினான்.
வெள்ளிகிழமை என்பதால் கோகிலா தலை குளித்து, சாமிக்கு வைத்தபிறகு மீதம் இருந்த பூவை அவள் சூடியிருந்தாள். குறள் அவளை உற்று பார்த்தான்.
அவளும் அவனை உற்று பார்த்தாள்.மெழுகுவற்றியின் ஒளியில் அவள் முகம் பிரகாசமாய் மின்னியது. தேவதை போல் இருந்தால் கோகிலா.
அவளது நெற்றியில் ஒரு புறம் அவரைக்கொடி போல் இருந்த கூந்தலை தன் விரல்களால்அவள் வலது புற காதெனும் பந்தலில் ஒதுக்கினான்.பின் அவளை பார்த்து
"காரிருள் மேகமாய் கூந்தல்
அரை நிலவாய் நெற்றி
முழுநிலவாய் முகம்
மின்னல் வெட்டும் விழிகள்
அதில் நட்சத்திரமாய் மூக்குத்தி
நிலவுக்குள் செவ்வாய்
செவ்வாய்க்குள் முத்துக்கள்
பெண்ணே உன் அழகை கண்டு எனக்கு
மூச்சு முட்டுகிறது"
என்று கூறிவிட்டு கண்களை மூடிக்கொண்டு பெருமூச்சு விட்டான் குரளமுதன். டேய் புண்ணாக்கு புருஷா ! நீ பேசிநத தாங்கமுடியாம கரண்ட் விட்டுடாங்க டா என்றாள் கோகிலா..
"விட்டுட்டாங்களா ? நான் கால் பரிச்சை அரை பரிட்சை எழுதறதுக்கு முன்னால விடாத கரண்ட் இப்போ முழு பரீட்சை எழுதறதுக்கு முன்னால மட்டும் எதுக்கு விடறானுங்க? "என்று கேட்டான் மறுபடியும் கரண்ட் நின்றது.
"எப்படி மாமன் பவர பார்த்த இல்ல " என்று சொல்லிகொண்டே
அவள் அருகில் சென்றான் ஏற்கனவே கோகிலாவின் கைகளை தன் கைகளால் நன்கு பற்றிகொண்டதால் கோகிலாவால் தப்பிக்க வழி இல்லாமல் நின்றாள். மிகவும் அமைதியாக இருந்த அந்த ரூம் , இருள் சூழ்ந்த அந்த மதி மயக்கும் மாலை நேரம், இரு உயிர்களின் மூச்சு காற்று மட்டுமே அந்த ரூமில் இருந்தது. இந்த ஒரு அழகான சூழ்நிலை இருவர் மனதிலும் ஆசை வெள்ளம் கரை புரண்டு ஓட தொடங்கியது. அதற்கேற்ப குரளமுதன் நூலளவு கூட இடைவெளி விடாமல் கோகிலாவை இறுக பற்றினான். இருவர் இடையேயும் மோகத்தீ சுடர் விட்டு எரிந்தது. குரலமுதன் அவளை பார்த்து என்னை ஈர்க்கும் உன் காந்த பார்வை ,சுண்டி இழுக்கும் உன் இதழ்கள்,எத்தனை வருடங்கள் காத்திருந்தன என் இதழ்கள் உன் ரோஜாப்பூ இதழ்களை பறிக்க என்று அவன் சொல்ல , அவளின் முகம் வெக்கத்தில் சிவந்தன, அவன் இதழ்கள் சத்தமில்லாமல் முத்தம் கொடுக்க நெருங்கிய தருணம்,
பளீர்னு ஒரு சத்தம் கேட்டது யாரோ தன்னை முதுகில் அடிப்பது போல உணர்ந்தான்!
மேலும் ஒரு கனத்த குரல் கேட்டது
"தடி மாடு மணி ஒம்போது ஆவுது இன்னும் தூங்குது பாரு தண்டசோறு என்று குரலமுதன் தயார் கூறினார்"
அவன் காதில் அந்த தண்டசோறு என்ற வார்த்தை தான் கேட்டது ஏனனில் அவனுக்கு அதுதான் அலாரம். பிறகு தான்அவனுக்கு புரிந்தது
"தன் தயார்தான் திட்டுகிறாள், அவள் தான் தன் முதுகில் அடிக்கிறாள் என்று.தான் கண்டது வெறும் கனவு என்று "
பின் கண்களை துடைத்துக்கொண்டு பெட் இல் இருந்து எழுந்தான்..
அவன் தாயார் "போய் கடைக்கு பொய் பொட்டுக்கடல வாங்கிட்டு வா சட்னி வைக்கணும்" என்றாள் .
"ச்ச கனவுல கூட நம்மல கல்யாணம்,romance ,எதுவும் பண்ண விட மாட்டாங்க போல " என்று முணுமுணுத்தான்
என்ன டா அங்க சவுண்ட் ? என்றாள் அவன் தாயார்.
பொட்டுகடல மட்டும் போதுமா? இல்ல வேற எதாவது வேணுமா? என்றான் குரளமுதன் ....